கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக விருப்பமில்லை என்று மோடி கூறினாரா? 

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக விருப்பமில்லை,’’ என்று மோடி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ மீண்டும் பிரதமராக விருப்பமில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தால் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியாது. பரமாத்மா என்னைத் தேர்ந்தெடுத்த நோக்கம் இதுவல்ல. ஒரு சன்னியாசியாக ஹிந்து தர்மத்திற்கு சேவை செய்யவே விருப்பம். பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி பேச்சு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  

Claim Link 

உண்மை அறிவோம்:

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மக்களவைத் தேர்தல் 2024 முடிவடைந்துள்ளது. இதில், பாஜக தனிப் பெரும்பான்மை பெறாத சூழலில், கூட்டணி கட்சிகள் தயவுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

NDTV l Indian Express l Hindustan Times

இதனையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் மோடியை கேலி கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். 

ஆனால், மீண்டும் பிரதமராக விருப்பமில்லை, என்று மோடி கூறியதாக, எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. 

இதுதொடர்பாக, நாம் புதிய தலைமுறை ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, ‘’இவ்வாறு நாங்கள் எந்த செய்தியும் வெளியிடவில்லை. இது எங்களது பெயரில் பரவும் போலியான நியூஸ் கார்டு,’’ என்று தெரிவித்தனர். 

மேலும், அவர்கள் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டின் லிங்கையும் நமக்கு அளித்தனர். 

இதனையே எடிட் செய்து, மீண்டும் பிரதமராக விருப்பமில்லை, என்று மோடி கூறியதாக, வதந்தி பரப்புகின்றனர், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக விருப்பமில்லை என்று மோடி கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Altered

Leave a Reply