அம்பேத்கரை அவமரியாதை செய்தாரா தி.மு.க எம்.எல்.ஏ?

தி.மு.க எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி அம்பேத்கரை அவமரியாதை செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி அம்பேத்கர் புகைப்படத்திற்கு அஞ்சலி செய்வதை தவிர்த்துவிட்டு பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் புகைப்படங்களுக்கு மட்டும் மலர் அஞ்சலி செய்வது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அண்ணல் அம்பேத்கர் அவர்களை […]

Continue Reading

மாநில சுயாட்சி பற்றி பேச புராணம் தெரிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

மாநில சுயாட்சி பற்றி பேச வேண்டும் என்றால் புராணம் படித்து, ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இதெல்லாம் புராணம் படிக்கனும். நான் அந்த அளவுக்கு படிச்சவன் இல்லை, இந்த மாதிரியான கதை எல்லாம் படிச்சி […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியைக் கிண்டல் செய்தாரா ஜெயக்குமார்?

“செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தார்” என்று எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியின் சிறு பகுதியை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “தரம் தாழ்ந்து இப்படி போய்விட்டார் என்று தான்… கர்ணன் படத்தில் […]

Continue Reading

தமிழக பாஜக தலைவரானதும் அதிமுக-வை விமர்சித்தாரா நயினார் நாகேந்திரன்?

தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்றதும் அ.தி.மு.க-வை விமர்சித்த நயினார் நாகேந்திரன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிகழ்ச்சி ஒன்றில் நயினார் நாகேந்திரன் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர், “அண்ணா திமுக இன்றைக்கு கூட்டணியில் இருக்கு, இல்லைங்கிறது இரண்டாவது விஷயம். சட்டமன்றத்தில் தைரியமா ஒரு ஆண்மையோட முதுகெலும்போடு பேசக்கூடிய அண்ணா திமுக-வை பார்க்க முடியவில்லை” […]

Continue Reading

அதிமுக-வில் இருந்து விலகுவதாக ஜெயக்குமார் அறிவித்தாரா?

அ.தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க-வைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் செய்திகள் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விலகல். பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் வழியில் என் அரசியல் பயணம் தொடரும் – […]

Continue Reading

வக்ஃப் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டாரா பிரியங்கா காந்தி?

வக்ஃப் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வக்ஃப் போராட்டத்தில் சின்ன ( இந்திரா காந்தி ) பிரியங்கா காந்தி அவர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

தமிழக கடலில் குப்பை கொட்டிய கேரளா என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழக கடலில் கேரளா கப்பலில் குப்பை கொண்டு கொட்டியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கப்பல் ஒன்றில் இருந்து கழிவுகள் கொட்டப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பை தொட்டியா? தமிழக அரசு என்ன செய்துகொண்டுயிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

ஆங்கிலம் பேசத் தடுமாறும் உதயநிதி என்று பரவும் வீடியோ உண்மையா?

உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலம் பேசத் திணறினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பு ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலினை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது ஸ்டாலின் இரத்தம் இங்கிலீஸ் தெரியாது 🤡😹 இந்த லட்சணத்துல தான் இருமொழி கொள்கை இருக்குது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு […]

Continue Reading

மியான்மர் நிலநடுக்கத்தின் போது குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் இருந்த செவிலியர்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்று பாதுகாத்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலடுக்கத்தின் போது பச்சிளம் குழந்தைகளை இரண்டு செவிலியர்கள் பாதுகாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நிலநடுக்கத்தின் போது ளதன்னுயிரை பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள் 🔥💪♥️ மியான்மர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் […]

Continue Reading

ராஜினாமா அறிவிப்பு வெளியிட உள்ள மோடி என்று பரவும் விஷம நியூஸ் கார்டு! 

தன்னுடைய பதவி விலகல் தொடர்பாக நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் வீடியோ வெளியிட்ட உள்ளார் நரேந்திர மோடி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டுடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மீண்டும் பிரதமர் மோடி உரை! நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் […]

Continue Reading

“மோடிக்கு ஆதரவு கொடுங்கள்” என்று பாகிஸ்தான் முஸ்லிம் கூறியதாகப் பரவும் வீடியோ உண்மையா?

இந்திய இஸ்லாமியர்களே திருந்துங்கள், பிரதமர் மோடிக்கு ஆதரவு தாருங்கள் என்று பாகிஸ்தானைச் சார்ந்த முஸ்லிம் ஒருவர் வீடியோ வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர் ஒருவர் தான் பாகிஸ்தானிலிருந்து பேசுவதாக வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “_அஸ்லாம் அலைக்கும். நான் *பாகிஸ்தானில்* இருந்து ஆசிப் சர்தாரி பேசுகிறேன். எனது இனிய *இந்திய […]

Continue Reading

திமுக அரசு கட்டிய பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க அரசின் வேலை என்று குறிப்பிட்டு கை வைத்தாலே சிமெண்ட் உதிர்ந்து விழும் நிலையில் உள்ள பாலம் ஒன்றின் வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive பாலம் ஒன்றி பில்லர்கள் சிமெண்ட் ஜல்லி கலவை எல்லாம் கரைந்து வெறும் கம்பியின் பலத்தில் தாங்கி நிற்கும் அளவுக்கு மிக மோசமான நிலையில் இருக்கும் வீடியோ சமூக […]

Continue Reading

5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் ஏடிஎம் கட்டணம் ரூ.2ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தப்படுகிறதா?

ஏடிஎம்ல் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.2ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தப்படுகிறது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எகிறும் ATM கட்டணம் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மே 1 முதல் ATMல் மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் […]

Continue Reading

சாலையில் தனியாக கிடந்த குழந்தையை காப்பாற்றிய மயில் என்று பரவும் வீடியோ உண்மையா?

சாலையின் நடுவே அமர்ந்திருந்த பச்சிளம் குழந்தை ஒன்றை ஆபத்துக்களிலிருந்து மயில் ஒன்று காப்பாற்றியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குழந்தை ஒன்று சாலையின் நடுவே அமர்ந்திருப்பது போலவும், வாகனங்கள் மோதாமல் காப்பாற்றி, குழந்தை சாலையைக் கடக்க மயில் ஒன்று உதவுவது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பின்னணியில் முருகன் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “நடுரோட்டில் […]

Continue Reading

திருவண்ணாமலை கோவில் பெயர் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் தமிழ் அகற்றப்பட்டதா?

திருவண்ணாமலை கோவிலில் உள்ள பெயர் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் தமிழ் அகற்றப்பட்டுவிட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவில் ஒன்றில் என்ன மொழி என்றே தெரியாத வகையில் ஏதோ ஒரு மொழியில் பெயர் மற்றும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழர்களிடம் இருந்து பறிபோகும் நிலையில் திருவண்ணாமலை.! ஆரியமும் […]

Continue Reading

சாலையில் செல்லும் பசுக்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று டெல்லி முதல்வர் உத்தரவிட்டாரா?

சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகச் செல்லும் பசுக்களை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது, அவற்றை யாரும் கடந்து செல்லக் கூடாது என்று டெல்லி முதலமைச்சர் உத்தரவிட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லியில் சாலையில் பசுக்கள் கூட்டமாக நிற்பதை அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா பார்வையிடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாஜக ஆட்சி செய்யும் தலைநகர் […]

Continue Reading

பாகிஸ்தான் சிறுவர்கள் கைகளில் கட்டுக்கட்டாக இந்திய ரூபாய் நோட்டு என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தானில் சிறுவர்கள் இந்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஏராளமான ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ளார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive இரண்டு சிறுவர்கள் கைகளில் ஏராளமான இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டள்ளது. அந்த வீடியோவில், “பாக்கிஸ்தாணில் நம் நாட்டு பணம் இப்ப புரியுதா பாரத பிரதமர் மோடிஜி […]

Continue Reading

அதிமுக-வை டயருடன் ஒப்பிட்டாரா அண்ணாமலை?

அ.தி.மு.க வை டயருடன் ஒப்பிட்டு “வண்டி ஓட டயர் முக்கியம்” என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “டயர் முக்கியம் – அண்ணாமலை வண்டி ஓடவேண்டும் என்றால் அதற்கு டயரும் முக்கியம்.டயர்களை பயன்படுத்திக்கொண்டு 2026ல் பாஜக வாகனம் தமிழ்நாட்டில் ஓடும். […]

Continue Reading

எச். ராஜாவுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தாரா?

நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று கூறிய எச்.ராஜாவுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஹெச்.ராஜாவுக்கு கண்டனம். நாடார்கள் தமிழர்கள் அல்ல என ஹெச்.ராஜா பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்மீதும் தமிழிசை சௌந்தரராஜன் மீதும் ஹெச்.ராஜாவுக்கு இருக்கும் […]

Continue Reading

“நாடார்கள் தமிழர்கள் அல்ல” என்று எச்.ராஜா கூறினாரா?

நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று எச்.ராஜா கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா பேசிய பேச்சின் ஒரு சில விநாடிகள் மட்டும் வெட்டி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல” என்று கூறுகிறார். வீடியோ மீது, ‘நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல – […]

Continue Reading

பாஜக-வுடன் கூட்டணி அமைந்தால் அ.தி.மு.க-விலிருந்து விலகி விடுவேன் என்று ஜெயக்குமார் கூறினாரா?

பாஜக-வுடன் கூட்டணி அமைத்தால், அதிமுக-வில் இருந்து விலகிவிடுவேன் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அதிமுகவிலிருந்த விலகி விடுவேன். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் வன்முறை என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் சிலர் பயங்கர ஆயுதங்களை வைத்துத் தாக்கிக்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் இளைஞர்கள் கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து வாகனங்களைத் தாக்கி உடைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தரபிரதேசத்தில் ஹோலி பண்டிகை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ரீல்ஸை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

நாக்பூரில் தொழுகை முடித்து வெளியே வந்தவர்கள் மீது போலீஸ் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

நாக்பூரில் மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை போலீசார் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திங்கள்கிழமை நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

அரசுப் பள்ளியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதா?

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கூடம் ஒன்றில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பள்ளி மாணவர்கள் போன்று சீருடை அணிந்த சிலர் தமிழ் சினிமா பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “ஸ்கூல்ல யே *** கூட்டி குடுத்தா எவன்டா கல்யாணம் பண்ணுவான்” என்று ஆபாசமாக குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

கருக்கலைப்புக்குச் சலுகை இல்லை என்று சீமான் ஆதங்கப்பட்டாரா?

கருக்கலைக்க காரணமான ஆண்களுக்கு பட்ஜெட்டில் எந்த சலுகையும் இல்லை என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கவர்ச்சி அறிவிப்புகளுடன் கூடிய வெற்று அறிக்கை. பட்ஜெட்டில் கருக்கலைக்கக் காரணமான ஆண்களுக்கு எந்த சலுகையும் இல்லை இதெல்லாம் ஒரு பட்ஜெட்டா? நான்காண்டுகளில் செய்யாததை […]

Continue Reading

‘இந்தியா’ என்ற பெயருக்கு விரிவாக்கம் உள்ளதா?

இந்தியா (INDIA) என்ற பெயருக்கு ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் பெற்ற நாடு (Independent Nation Declared In August) என்று விரிவாக்கம் உள்ளது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive இந்தியா என்ற வார்த்தைக்கு என்ன விரிவாக்கம் என்று ஒரு பெண் கேட்கும் வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு ஒருவர் ஆகஸ்ட் மாதம் […]

Continue Reading

திமுக ஆட்சியில் செங்கல்பட்டு பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் மோதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி ஒன்றின் மாணவர்கள் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பள்ளி மாணவர்கள் பயங்கரமாக தாக்கிக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டின் அப்பா வளர்ப்பில் பள்ளி பிள்ளைகள் கஞ்சா போதையில் ஆனந்தமாய் ஆடி […]

Continue Reading

இந்தியில் பேசிய சுந்தர் பிச்சை என்று பரவும் வீடியோ உண்மையா?

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சைக்கு இந்தி தெரியாது என்று தமிழ்நாட்டுத் தலைவர்கள் கூறி வரும் நிலையில், சுந்தர் பிச்சை இந்தியில் பேசிய வீடியோ ஒன்றை பாஜக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுந்தர் பிச்சை தனக்கு இந்தி தெரியாது என்று கூறியதாக தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறிய காட்சி மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தியில் […]

Continue Reading

குஜராத் ஆம் ஆத்மி நிர்வாகி வீட்டில் சிக்கிய பணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

குஜராத் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி வீட்டில் சிக்கிய பணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டுக்கட்டாக அறை முழுக்க நிறைந்திருக்கும் பணத்தை சிலர் இயந்திரம் உதவியோடு எண்ணும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத் சூரத் நகர ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சேகர் அகர்வாலின் வீடு இடி ரைடில் பெற்ற […]

Continue Reading

“தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது” என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், “தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது மக்களவையில் காட்டமாக பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  உண்மைப் பதிவைக் காண: […]

Continue Reading

“வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வோம்” என்று வெளிப்படையாக அமித்ஷா அறிவித்தாரா?

நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டாலும் அது காங்கிரசுக்கு போகாது என்று வெளிப்படையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படும் என்ற அர்த்தத்தில் அமித்ஷா பேசியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரு வேறு நியூஸ் கார்டுகளை ஒன்று சேர்த்து ஒரே பதிவாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. முதல் நியூஸ் கார்டில், “வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பாஜக நிர்வாகிகள்” […]

Continue Reading

இந்து கோவிலில் இருந்து ரூ.445 கோடி வசூலித்து மசூதி, சர்ச்சுகளுக்கு வழங்கியதா தி.மு.க அரசு?

இந்து கோவில்களிலிருந்து ரூ.445 கோடி பணத்தை வசூலித்து அதில் 330 கோடியை மசூதி, தேவாலயம் கட்ட கொடுத்த தி.மு.க அரசு என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை மீண்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்த செய்தியில், “கோயில்களில் இருந்து ரூ.445 […]

Continue Reading

பெரியார் மையத்தில் இந்தி என்று பரவும் புகைப்படம் – உண்மை என்ன?

பெரியார் மையத்தில் இந்தியில் எழுதப்பட்டிருப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெரியார் மையத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*Controli மவனுகளா என்னடா இதெல்லாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: டெல்லியில் உள்ள பெரியார் […]

Continue Reading

வால்நட் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் கரையுமா?

வால்நட் பருப்பை தினமும் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கற்கள் கரையும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் கார்டு டைப்பில் மருத்துவக் குறிப்பை பகிர்ந்துள்ளனர். அதில், “பித்தப்பையில் கற்கள். வால்நட் பருப்பை தினமும் ஊற வைத்து சாப்பிட கற்கள் படிப்படியாக கரையும். குறிப்பாக வலியின்றி கற்களை உடலில் இருந்து வெளியேற்றி விடும்” என்று […]

Continue Reading

அமித்ஷாவை மிரட்டி அமர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிரட்டி அமர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி காகோலி கோஷ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் பேச அதற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பதில் சொல்ல முடியாமல் திணறியது போன்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அவர் […]

Continue Reading

பாகிஸ்தானை வீழ்த்தியதும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீடியோ இதுவா?

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய போது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய கிரிக்கெட் அணியினர் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை ஸ்டேடியத்தில் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்த பிறகு இந்திய கிரிக்கெட் […]

Continue Reading

ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி வங்கிக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ததா?

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி (write-off) செய்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிந்துகொள்ள ஆய்வு செய்தோம். பிரபல பாலிவுட் நடிகையும் ஐபிஎல் கிரிக்கெட் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தொடர்பாக சமீபத்தில் கேரள காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டது. அதில், “நடிகை ப்ரீத்தி ஜிந்தா தன்னுடைய சமூக ஊடக பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜக-வுக்கு கொடுத்து, வங்கிக் கடன் […]

Continue Reading

வனிதா விஜயகுமார் 5வது திருமணம் என்றும் பரவும் புகைப்படம் உண்மையா?

நடிகை வனிதா விஜயகுமார் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை வனிதா விஜயகுமார் – நடன இயக்குநர் ராபர்ட் ஆகியோர் திருமணம் செய்துகொள்வது போன்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தனது மூன்றாவது கணவனை ஐந்தாவது கணவனாக மீண்டும் திருமணம் செய்த நடிகை.. […]

Continue Reading

கடையநல்லூர் ரயில் நிலையத்தில் ஆங்கில எழுத்தை அழித்த தி.மு.க-வினர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கடையநல்லூர் ரயில் நிலைய பெயர் பலகையில் இந்திக்கு பதில் ஆங்கில எழுத்தை அழித்த தி.மு.க-வினர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடையநல்லூர் ரயில் நிலையத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் ஆங்கில எழுத்துக்களை மட்டும் அழித்தது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஹிந்தி மொழிய அழிச்சிட்டோம் […]

Continue Reading

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதா?

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டது என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் அதிஷி மற்றும் ரேகா குப்தா ஆகியோர் இருக்கும் புகைப்படங்களை ஒன்றாக வைத்து உருவாக்கப்பட்ட பதிவை பலரும் Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிஷி முதல்வராக இருக்கும் போது அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படம் இருந்ததையும், ரேகா குப்தா பதவியேற்ற பிறகு […]

Continue Reading

சத்ரபதி சிவாஜியின் உண்மையான தோற்றம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

பாலிவுட் திரைப்படங்களில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியை மிகைப்படுத்திக் காட்டுவது போலவும், உண்மையில் உடல் வலிமை குறைந்தவராக அவர் இருந்தார் என்றும் ஒரு புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சத்ரபதி சிவாஜியின் உண்மை படம் என்று குறிப்பிட்டு புகைப்பட பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பாலிவுட்டில் மிகைப்படுத்திக் காட்டப்படுவதாக அதில் வேறு சில புகைப்படங்களையும் அதில் வைத்திருந்தனர். […]

Continue Reading

அப்பாவை மணந்த மகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அப்பாவையே திருமணம் செய்துகொண்ட மகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்து அழைத்து வருவது போலவும், அவர்களிடம் மூன்றாவதாக ஒருவர் பேட்டி எடுப்பது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “24 வயது பெண் தன்னுடைய சொந்த 50 வயது தந்தையை திருமணம் செய்தார்” […]

Continue Reading

“கெட் அவுட் ஸ்டாலின்” என்று நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

கெட் அவுட் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் உலக அளவில் 2வது இடத்தில் உள்ளது என்று சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டு வெளியிட்டதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “X தளத்தில் உலகளவில் 2வது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் ட்ரெண்டாகும் #GetOutStalin” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

துருக்கியில் இருந்து எகிப்துக்கு சென்ற அந்த காலத்து ரயில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

துருக்கியில் இருந்து மெக்கா, மதினா வழியாக எகிப்து தலைநகர் கெய்ரோ வரை சென்ற ரயில் என்று ஒரு பழைய பாழடைந்த ரயில் இன்ஜின் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பழைய கைவிடப்பட்ட ரயில் இன்ஜின்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரு காலத்தில்… துருக்கியே நாட்டிலிருந்து புறப்பட்டு, சிரியா ஜோர்டான் மெக்கா மெதினா ஜெரூசலம் […]

Continue Reading

டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் யமுனை ஆரத்தி தொடங்கப்பட்டதா?

டெல்லியில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து யமுனை நதிக்கு ஆரத்தி காட்டுவது மீண்டும் தொடங்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றுக்கு ஆரத்தி எடுத்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் பாஜக ஆட்சி 27 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்ததைத் தொடர்ந்து யமுனை ஆற்றங்கரையில் யமுனா ஆரத்தி மீண்டும் தொடங்கியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

கிராமத்தை அழித்து நடிகர் விஜய் கட்டிய பள்ளிக்கூடம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அழகிய பசுமையான கிராமத்தை அழித்து நடிகரும் தவெக தலைவருமான விஜய் கட்டிய பள்ளிக் கூடம் என்று இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயல்வெளி போன்று இருக்கும் இடம் ஒன்றின் புகைப்படம் மற்றும் பள்ளிக் கூட கட்டிடம் ஒன்றின் புகைப்படத்தை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக சேர்த்து நடிகர் விஜய்யின் பள்ளி அமைவதற்கு முன்பு, கட்டிய பிறகு என்று […]

Continue Reading

“அண்ணாமலைக்கு விஜயகாந்த் நிலைதான் ஏற்படும்” என்று ஜவாஹிருல்லா எச்சரிக்கை விடுத்தாரா?

அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை இல்லை என்றால் விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா கூறியது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “எச்சரிக்கை. ஆட்டு குட்டி அண்ணா மலைக்கு நாவடக்கம் தேவை. […]

Continue Reading

கும்பமேளாவில் அமைக்கப்பட்ட கழிப்பறை என்று பரவும் வீடியோ உண்மையா?

கும்பமேளாவில் ரூ.4000 கோடி செலவில் அமைக்கப்பட்ட தற்காலிக கழிப்பறையின் நிலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வரிசையாகக் கழிப்பறை கோப்பைகள் அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. எந்த மறைவும் இன்றி, வரிசையாக இந்த கழிவறை கோப்பைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “4000 கோடி செலவில் உலகமே வியக்கும் பாத்ரூம் வசதியை கும்பமேளாவில் செய்த எங்கள் […]

Continue Reading

“ஜெயலலிதாவின் நகைகளை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று அண்ணாமலை கூறினாரா?

ஜெயலலிதாவின் நகை, சொத்துக்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகை சொத்துக்களை […]

Continue Reading

டெல்லியில் வெற்றி பெற்றதும் பாஜக மெட்ரோ கட்டணத்தை உயர்த்தியதா?

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடன் டெல்லி மெட்ரோ கட்டணத்தை ரூ.60 முதல் 90 வரை உயர்த்திய பாஜக என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ‘டெல்லி மக்களுக்கு நல்ல நாள் முதல் பரிசு நண்பர்களே..!! மெட்ரோ கட்டணம் ₹60முதல் ₹90 வரை உயர்வு மகளிர் இலவச பேருந்து சேவை மூடல் 😄” என்று ஃபேஸ்புக்கில் […]

Continue Reading