‘’ மிக்ஜாம் புயல் நிவாரண நிதி ரூ.6000 வழங்கக் கூடாது,’’ என்று பாஜக வழக்கு தொடர்ந்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

News தமிழ் 24*7 லோகோவுடன் உள்ள இதில், ‘’ புயல் வெள்ள நிவாரண நிதி 6000 ரூபாயை நேரடியாக மக்களுக்கு வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ. 6000 மற்றும் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் ரூ. 5 லட்சம் வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Dinamani Link l Hindu Tamil Link

இந்நிலையில் வெள்ள நிவாரண நிதியாக, ரூ.6000 வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளதாகக் கூறி மேற்கண்ட வகையில் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது.

ஆனால், இவ்வாறு பாஜக எந்த வழக்கும் தொடரவில்லை. நிவாரண நிதியை ரூ.10000 ஆக உயர்த்தி வழங்கவே பாஜக வலியுறுத்தியுள்ளது.

அடுத்தப்படியாக, இதுபோன்று எந்த செய்தியும் News தமிழ் 24*7 ஊடகம் வெளியிடவில்லை. அவர்கள் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கீழே தரப்பட்டுள்ளது.

உண்மையான செய்தியையும், போலியான செய்தியையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.

எனவே, News தமிழ் 24*7 ஊடகம் பெயரில் சிலர் வேண்டுமென்றே போலியான செய்தியை உருவாக்கி, வதந்தி பரப்புகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மிக்ஜாம் புயல் நிவாரண நிதி ரூ.6000 வழங்கக் கூடாது என்று பாஜக வழக்கு தொடர்ந்ததா?

Written By: Fact Crescendo Team

Result: Altered