‘’பெண் உடன் நெருக்கமாக நடனமாடும் கிறிஸ்தவ பாதிரியார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட பதிவில், ‘We stand with Kanal Kannan’ எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதன் கமெண்ட் பகுதியை பார்வையிட்டபோது, காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளதும் தெரியவருகிறது.

எனவே, இதுபற்றி அறிய நாம் கனல் கண்ணன் ட்விட்டர் பக்கம் சென்று பார்வையிட்டோம். அவரும் இதே வீடியோவை பகிர்ந்து, கிறிஸ்தவ மதம் பற்றி விமர்சித்திருந்ததையும் கண்டோம்.

Tweet Link

இதன்படி, முதலில் கனல் கண்ணன் இந்த பதிவை பகிர்ந்துள்ளதும், அதனையே இந்து மக்கள் கட்சி தரப்பில் மறு பகிர்வு செய்துள்ளனர் எனவும் தெரியவருகிறது.

எனவே, இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுள் உதவியுடன் ரிவஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, கடந்த ஜூன் 20ம் தேதியன்று இந்த வீடியோ papapopodoasfalto என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டோம்.

இந்த பதிவில், கலை நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு நடனமாடியதாக, வீடியோவை பகிர்ந்த நபரே கமெண்ட் செய்துள்ளார்.

இதன்படி, இந்த வீடியோவை பகிர்ந்த நபரும், அதில் பாதியார் வேடத்தில் இருக்கும் நபரும் ஒருவரே. அவர் தன்னை ஒரு நடிகர் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவர் உண்மையான பாதிரியார் அல்ல என்றும், தொழில்முறை நடிகர் என்றும் தெரியவருகிறது.

மேலும், இந்த நபர் யூடியுப் சேனல் ஒன்றும் நடத்துகிறார். அதிலும், தன்னை ஒரு நடிகன் என்றும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ போன்று நிறைய வீடியோக்களில் அவர் கிறிஸ்தவ பாதிரியார் வேடத்தில் நடித்துள்ளார்.

Youtube channel link

Inácio Falcão எனும் இயற்பெயரைக் கொண்ட இந்த நபர் Papa Popó Caruaru என்ற பெயரில் கிறிஸ்தவ பாதிரியார் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி, அந்த பெயரிலேயே அவ்வப்போது பெண்களுடன் நடனமாடி, சமூக வலைதளங்களில் வீடியோ பகிர்ந்தும் வருகிறார். எனவே, அவர் உண்மையான பாதிரியார் அல்ல என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title: பெண் உடன் நெருக்கமாக நடனமாடும் கிறிஸ்தவ பாதிரியார் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: Misleading