விஜய் மாநாட்டுத் திடலில் கீர்த்தி, திரிஷா கட்அவுட் என்று பரவும் விஷம புகைப்படம்!

நடிகர் விஜய்யின் தவெக மாநாட்டுத் திடலில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், திரிஷா கட்அவுட் வைக்கப்பட்டது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive நடிகர் விஜய், புஸ்சி ஆனந்த், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், திரிஷா ஆகியோருக்கு கட்அவுட் வைக்கப்பட்டது போன்று புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷை பெருந்தலைவி அம்மா, நடிகர் […]

Continue Reading

எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்துப் பேசும் ஆர்.பி.உதயகுமார் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்துப் பேசும் ஆர்.பி.உதயகுமார்’’ என்று கூறி நியூஸ் 18 தமிழ்நாடு பெயரில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  நியூஸ் 18 தமிழ்நாடு லோகோவுடன் உள்ள இந்த வீடியோ செய்தியில், ‘’ எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆர்பி உதயகுமார் சர்ச்சை பேச்சு.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வெற்றிப்பெற்ற ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற முடியவில்லை […]

Continue Reading

ரயில் நிலைய நடைமேடை மூழ்கும் அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காட்சி… தமிழ்நாட்டைச் சார்ந்ததா?

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு ரயில் நிலையத்தின் நடைமேடை மூழ்கும் அளவுக்கு வெள்ளம் சென்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I instagram.com I Archive  ரயில் நிலையத்தின் நடைமேடை மூழ்கும் அளவுக்கு வெள்ள நீர் பாயும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “ஈரோடு, சேலம், பங்காருப்பேட் வழியாக செல்லும் பெங்களூர் சிட்டி விரைவு வண்டி இன்னும் சற்று நேரத்தில் மூன்றாவது […]

Continue Reading

‘கட்டுனா கவுண்டச்சி.. இல்லைனா பூசணிக்காய்’ என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

‘’கட்டுனா கவுண்டச்சி.. இல்லைனா பூசணிக்காய்’’ என்று கவுண்டர் சாதியை சேர்ந்த ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் எழுதி வைத்துள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 இந்த புகைப்படத்தில், ’’கட்டுனா கவுண்டச்சி… இல்லைனா.. இருக்கவே இருக்கு.. […]

Continue Reading

‘நிர்வாண பணிகளில் திருப்தியில்லை’ என்று நடிகை கஸ்தூரி கூறினாரா?

‘’நிர்வாண பணிகளில் திருப்தியில்லை’’ என்று நடிகை கஸ்தூரி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link 1 l Claim Link 2   இதில், ’’நிர்வாண பணிகளில் திருப்தியில்லை.இன்னும் சிறப்பாக செயல்படனும்‘’, என்று எழுதப்பட்டுள்ளது.   பார்ப்பதற்கு, நடிகை கஸ்தூரி அவரது எக்ஸ் வலைதளத்தில் இவ்வாறு பதிவு வெளியிட்டது போன்று உள்ளது.   […]

Continue Reading

கோவிலில் பெண்ணின் நகை பறிப்பு வீடியோ தமிழகத்தை சார்ந்ததா?

தமிழக கோவில் ஒன்றில் பெண் ஒருவரின் நகையைத் திருடன் பறித்துச் சென்ற காட்சி என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook கோவிலில் பெண்கள் பஜனை பாடல்களைப் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அப்போது ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பெண் திடீரென்று கழுத்தைப் பிடித்துக் கொண்டு எழுகிறார். அவரது நகையை யாரோ ஜன்னலுக்கு வெளியே இருந்து திருடிச் சென்றிருப்பது தெரிகிறது. நிலைத் […]

Continue Reading

மழை வெள்ளத்தின் போது மு.க.ஸ்டாலின் விளையாடிக் கொண்டிருந்தாரா?

மழை வெள்ளத்தில் மக்கள் அவதியுற்றபோது மு.க.ஸ்டாலின் விளையாடிக் கொண்டிருந்தார் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook மு.க.ஸ்டாலின் ஏஐ ஏர் ஹாக்கி விளையாடிய பழைய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மழையாவதுமசுராவது ….” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: சென்னையில் 2024 அக்டோபர் 15ம் தேதி கன மழை […]

Continue Reading

‘நான் சூட்டிய ரத்தினம் என்ற பெயர்தான் ரத்தன் டாடா என மாறியது’ என்று சீமான் கூறினாரா?

‘’ரத்தன் டாடா எங்க ஊர்தான்; அவருக்கு நான்தான் முதலில் ரத்தினம் என பெயர் வைத்தேன்’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ எல்லாருமே தப்பா புரிஞ்சுக்கிறாங்க!!அவரு பெயரு ரத்தான் டாடா இல்ல!!!ரத்தினம் !!!!எங்க ஊர்ல டால்டா கடை வச்சிருந்தாரு!!!நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது […]

Continue Reading

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் பாமக கொடி போன்று மூவர்ண பொடி தூவப்பட்டதா?

‘’சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் பாமக கொடி போன்று வானத்தில் மூவர்ண பொடி தூவப்பட்டது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவின் தலைப்பில் ‘’ இவனுங்க வேற சாகசம் சொல்லிட்டு பாமக கட்சி கொடியை பறக்க விடறாங்க.அதுவும் திராவிட முதலமைச்சர் முன்னால்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு […]

Continue Reading

புஸ்ஸி ஆனந்த் மது போதையில் பேசும் காட்சி என்று பரவும் வதந்தி…

‘’தவெக., மாநாட்டுக்கு மது அருந்தி விட்டு வந்த பாண்டிச்சேரி புஸ்ஸி ஆனந்த்..!’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’*மாநாட்டுக்கு வரும்போது மது அருந்தி விட்டு வரக்கூடாது என்று விஜய் சொன்னது தொண்டர்களுக்கு மட்டும்தான் போல,,**இவரு பாண்டிச்சேரி புஸ்ஸி..!*இது நல்லாருக்கே..🥴*”’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Archived Link […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசப்பட்டதா?

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I X Post I Archive எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் விழுந்த வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் போஸ்டில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பழனிசாமி முகரையில் செருப்பு வீச்சு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு […]

Continue Reading

‘மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல’என்று மோடியை விமர்சித்தாரா குஷ்பு?

‘’மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல’’ என்று மோடி பற்றி குஷ்பு விமர்சனம் செய்ததாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ என்னக்கா ஜி மேலயே அட்டாக்கா😱😱!’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் நியூஸ் கார்டு ஒன்றையும் இணைத்துள்ளனர். அதில், ‘’என்னை பொறுத்த வரை.. மனைவியை விட்டுச் செல்பவன் […]

Continue Reading

இயக்குனர் மிஷ்கின் மற்றும் அவரது மகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’இயக்குனர் மிஷ்கின் மற்றும் அவரது மகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’என் மனைவிக்கு எனக்கு பாலமாக என் மகள் தான் இருக்கறாள், என் மகளிடம் நான் என் மனைவியை கைவிட்டது போல் நீ உன் அம்மாவை கைவிட்டு விடாதே என்று சொல்லி தான் வளர்த்தேன் […]

Continue Reading

லட்டு புனிதப்படுத்தும் சடங்கு புகைப்படத்தை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகள்!

திருப்பதியில் லட்டை புனிதப்படுத்தும் சடங்கின் ஒரு பகுதியாக புனித நீர் தெளித்தபோது எடுத்த புகைப்படத்தை அசைவ உணவுகளுக்கு புனித நீர் தெளித்தது போன்று சிலர் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அசைவ உணவுகள் மீது புனித நீர் தெளிப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டுடே சேலம் செல்வி மெஸ் …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

‘முஸ்லிம் ஹோட்டல்களில் உணவை ஹலால் செய்ய எச்சில் துப்பலாம்’ என்று தமிழ்நாடு கோர்ட் கூறியதா?

‘’முஸ்லிம் ஹோட்டல்களில் உணவை ஹலால் செய்ய எச்சில் துப்பலாம்’’ என்று தமிழ்நாடு கோர்ட் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ முஸ்லிம் ஹோட்டல்களில் உணவை ஹலால் ஆக்குவதற்காக எச்சில் துப்புவதை நீதிமன்றம் உறுதிசெய்தது. தமிழ்நாட்டில் ஒரு நீதிமன்ற வழக்கில், சமையற்காரன் துப்பாதவரை ஹலால் முழுமையடையாது என்று முஸ்லிம்கள் […]

Continue Reading

திருப்பதி லட்டு சர்ச்சை; பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?

‘’திருப்பதி லட்டு விவகாரத்தில் இந்து மக்களை இழிவுபடுத்திய பியூஷ் மனுஷ்க்கு சேலத்தில் முதல் மரியாதை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ நேத்து திருப்பதி லட்டு விவகாராத்தில் ஹிந்துகளை இழிவு படுத்திய பியுஷ் மனுஷ்க்கு சேலத்தில் முதல் மரியாதை இனிவரும் காலங்களில் இந்துக்களின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய […]

Continue Reading

கோவிலுக்கு நெய் விநியோகிக்கும் ஆவினுக்கு எதற்கு ஹலால் என்று பரவும் விஷம பதிவு!

ஆவின் வெண்ணெய்யில் எதற்கு ஹலால் முத்திரை உள்ளது என்று சிலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆவின் வெண்ணெய் பாக்கெட் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்ன பாபுஜி ஆவினில் எதற்கு ஹலால்… இந்த ஆவின்தான் தமிழக கோயில்களுக்கும் நெய் சப்ளை செய்கிறதாம்… கொடுமை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை […]

Continue Reading

லட்டு புனிதப்படுத்தும் சடங்கு புகைப்படத்தை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகள்!

திருப்பதியில் லட்டை புனிதப்படுத்தும் சடங்கின் ஒரு பகுதியாக புனித நீர் தெளித்தபோது எடுத்த புகைப்படத்தை அசைவ உணவுகளுக்கு புனித நீர் தெளித்தது போன்று சிலர் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அசைவ உணவுகள் மீது புனித நீர் தெளிப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டுடே சேலம் செல்வி மெஸ் …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

திருமாவளவன் பேச்சை கேட்டு மதம் மாறிய தலித்கள் மீது உயர் சாதி முஸ்லீம்கள் தாக்குதல்!

‘’ திருமாவளவன் பேச்சை கேட்டு மதம் மாறிய தலித்கள் மீது உயர் சாதி முஸ்லீம்கள் தாக்குதல்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ அரே பில்லா…துலுக்கத்துக்கு வந்த சோதனை…இந்து மதத்தில் ஜாதிய கொடுமைகள் இருப்பதால் முஸலீமாக மதம் மாறினால் பாய் என்றும் பாயம்மானு கூப்பிடுவாங்கனு தெருமா […]

Continue Reading

பெரியாரை செருப்பால் அடித்த பெண் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

ஈ.வெ.ராமசாமி பொியாரை செருப்பால் அடித்த பெண் என்று ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தை பொியார் மற்றும் ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை ஒன்று சேர்த்து புகைப்பட பதிவு ஒன்றை உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “செருப்பால் அடித்த சிங்கப்பெண். முதன்முதலில் பெரியாரை செப்பால் அடித்த சிங்கப்பெண் இந்த பொன்னம்மாள் பாட்டிதான்” என்று […]

Continue Reading

‘போதை ஒழிப்பு மாநாட்டில் சி.வி.சண்முகம் பங்கேற்பார்’ என்று அதிமுக அறிவித்ததா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் போதை ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சி.வி.சண்முகம் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “போதை ஒழிப்போம், பாதை அமைப்போம் – சி.வி.சண்முகம் சூளுரை. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி […]

Continue Reading

‘வகுப்பறையில் மாணவிகள் மது விருந்து’ என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’திமுக ஆட்சியில் மது விருந்து நடத்தும் மாணவிகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில் ‘’ பள்ளி குழந்தைகள் சாராயம் குடிக்க யார் காரணம்? அதில் ஆசிரியருக்கு பங்கு உண்டு தானே? நீங்க சொல்லி கொடுத்த பாடம் இப்படிதான் இருந்தது. இதற்கு காரணம் யார்? இதுபோல் நிகழாமல் இருக்க […]

Continue Reading

இரவு மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஒசூர் என்று பரவும் விஷம புகைப்படம்!

இரவு நேரத்தில் மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஒசூர், கன்னியாகுமரி நகரம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூயார்க்கின் மேன்ஹாட்டன் (Manhattan) தீவின் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “கிட்டுணகிரி மாவட்டம் ஓசூர் நகரம் இரவு நேர மின்விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-க்கு சிறை தண்டனை என்ற செய்தி தற்போது வெளியானதா?

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்று தந்தி டிவி வெளியிட்ட செய்தி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “தி.மு.க பிரமுகருக்கு 10 ஆண்டு சிறை. திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை. 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்குக் […]

Continue Reading

‘சினிமாப் பாட்டு பாடி, ஆடும் பாதிரியார்’ என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டை சார்ந்ததா?

கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பள்ளி விழாவில் சினிமா பாட்டுப் பாடி ஆடிய வீடியோவை சிலர் பகிர்ந்து தமிழ்நாட்டில் நடந்தது போன்று திராவிட கட்சிகளை விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற காவாலயா பாடலை பள்ளிக்கூட விழாவில் பாதிரியார் ஒருவர் பாடி ஆடும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “ஏண்டா திக, திராவிட நாய்களா இதெல்லாம் ஸ்கூல் லிஸ்ட்ல […]

Continue Reading

“சாதி தேவை என்று கருணாநிதியே கூறிவிட்டார்” என்று பரவும் வீடியோ உண்மையா?

“சாதி தேவை என்று முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி கூறிவிட்டார்” என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பேசிய பழைய வீடியோவை எளிதில் அடையாளம் கண்டுவிட முடியாத அளவுக்கு எடிட் செய்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் அவர், “இன்றைக்கு சாதி தேவைதான். எதற்கு… நான் யார் என்று சொன்னால் தான் […]

Continue Reading

‘மாணவிகளைத் தொட்டு ஜெபம்’ என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

பள்ளியில் மாணவிகளைத் தொட்டு ஜெபம் செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளியில் பிற்போக்கு விஷயங்களை பேசியதால் மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்ட சூழலில் இப்போது எடுக்கப்பட்ட வீடியோ போல இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாணவிகளின் தலையைத் தொட்டு கிறிஸ்தவ ஜெபம் செய்யப்பட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அறிவுக் குருடன் […]

Continue Reading

விஜய் ரசிகர்கள் திரையரங்கம் உள்ளே பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்களா?

நடிகர் விஜய் ரசிகர்கள் திரையரங்கத்துக்குள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திரையரங்கத்துக்குள் பட்டாசு வெடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவனுங்கள வச்சாடா ஆட்சியைப் பிடிக்க போற விஜய் தியேட்டரில் பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள் அடப்பாவிங்களா பத்தி இருந்தா கூண்டோட கைலாசம் போய் இருப்பீங்களேடா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

“நெல் மூட்டைகள் மழையில் சேதம்; விவசாயி சோகம்”- இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் நடந்த சூழலில், மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்ததைக் கண்டு விவசாயி ஒருவர் சோகமாக அமர்ந்திருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்திருக்க, விவசாயி ஒருவர் வேதனையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கார் ரேஸுக்கு டிக்கெட் கிடைக்குமா, கிடைக்காதா என்ற […]

Continue Reading

“தி.மு.க ஆட்சியில் மோசமான நிலையில் உள்ள தமிழக சாலை” என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் கார் ரேஸ்க்கு ரோடு போட நிதி உள்ளது, ஆனால் மக்களுக்கு சாலை அமைக்க நிதி இல்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பார்முலா கார் ரேஸ் புகைப்படம் மற்றும் சாலையில் மிகப்பெரிய பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் புகைப்படம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

“தி.மு.க ஆட்சியில் மோசமான நிலையில் உள்ள தமிழக சாலை” என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் கார் ரேஸ்க்கு ரோடு போட நிதி உள்ளது, ஆனால் மக்களுக்கு சாலை அமைக்க நிதி இல்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பார்முலா கார் ரேஸ் புகைப்படம் மற்றும் சாலையில் மிகப்பெரிய பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் புகைப்படம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

நீளம் தாண்டுதலுக்கு தயாராக இருக்கும் ஶ்ரீபெரும்புதூரின் குண்டும் குழியுமான சாலைகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஶ்ரீபெரும்புதூர் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் சிலர் லாங் ஜம்ப் போட்டி நடப்பது போல் வீடியோ எடுத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எமன் மற்றும் சித்ரகுப்தன் வேடம் அணிந்த சிலர் சாலையில் உள்ள பள்ளத்தில் லாங் ஜம்ப் எனப்படும் நீளம் தாண்டுதல் போட்டியை நடத்தியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருப்பெரும்பூதூரின் சாலைகள் Long […]

Continue Reading

சென்னை ஃபார்முலா கார் ரேஸில் நிவேதா பெத்துராஜ் பங்கேற்றாரா?

சென்னையில் நடந்த பார்முலா 4 கார் ரேசில் நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்றது போன்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய (பார்முலா போட்டி) காரை அறிமுகம் செய்கிறேன் என்று கூறிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பார்முலா 4 கார் பந்தயத்தின் களம் இறங்கிய நடிகை நிவேதா பெத்துராஜ் ” […]

Continue Reading

டைம்ஸ் ஸ்கொயரில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அமெரிக்கா சென்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயரில் அவருடைய புகைப்படத்தை வௌியிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I x.com I Archive நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் மு.க.ஸ்டாலினை வரவேற்று அவரது புகைப்படத்துடன் தகவல் வெளியிடப்பட்டதாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த […]

Continue Reading

‘பெற்ற தாயை மதிக்காமல் சென்ற விஜய்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பெற்ற தாயை மதிக்காமல் சென்ற விஜய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஏதோ சும்மா கடந்து போகிற ஆள் இல்லடா… அது பெத்த அம்மா 🤦’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து […]

Continue Reading

தமிழில் பாடப்படும் இந்திய தேசிய கீதம் என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழக ஆசிரியை ஒருவர் தமிழில் இந்திய தேசிய கீதத்தை மொழிபெயர்த்துப் பாடியுள்ளார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆசிரியை மற்றும் பள்ளி மாணவர்கள் பாடும் பாடல் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அந்த ஆசிரியை, “நேஷனல் ஆன்தமை தமிழில் பாடப்போகிறோம்” என்கிறார். அதைத் தொடர்ந்து, “இனங்களும், மொழிகளும் ஆயிரம் இருந்தும், மனங்களில் பாரத தாயே” […]

Continue Reading

‘திருப்பரங்குன்றத்தில் மேள தாளம் இல்லாமல் நடந்த சாமி ஊர்வலம்’ என்ற தகவல் உண்மையா?

‘’திருப்பரங்குன்றத்தில் மேள தாளம் இல்லாமல் நடந்த சாமி ஊர்வலம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கொட்டு மேளத்துக்கு தடை!! திருப்பரங்குன்றத்தில் மேள தாளம் இல்லாமல் நடந்த சாமி ஊர்வலம்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Archived Link l Claim Link 1 l Claim Link 2 […]

Continue Reading

தங்கலான் படம் சரியில்லை என்று பணத்தை திரும்பிக் கேட்டு ரசிகர்கள் வாக்குவாதம் செய்தனரா?

தங்கலான் படம் சரியில்லை என்பதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் டிக்கெட் பணத்தை திரும்ப கேட்டதாதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive தந்தி டிவி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “தங்கலான் பார்த்த ரசிகர்கள் ஆத்திரம்.. டிக்கெட்டை திரும்ப கேட்டு வாக்குவாதம். படம் பாதியில் நிறுத்தப்பட்டு பணத்தை திரும்ப வழங்கிய […]

Continue Reading

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் நடைபெறுகிறது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’உரிமைத்தொகை – புதிய அறிவிப்பு. ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. […]

Continue Reading

நடிகர் சிவ கார்த்திகேயனை தாக்கிய தனுஷ் ரசிகர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

நடிகர் தனுஷைப் பற்றி தவறாகப் பேசிய நடிகர் சிவ கார்த்திகேயனை தனுஷ் ரசிகர்கள் தாக்கினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் நடிகர் சிவ கார்த்திகேயனை சிலர் தாக்குவது போன்ற வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தனுஷ் தன்னை வளர்த்து விட வில்லை என கூறிய  நடிகர் சிவகார்த்திகேயன் […]

Continue Reading

கேரளா வயநாடு நிவாரணப் பணிக்கு ரூ.35 கோடி வழங்கிய அஜித் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

கேரளா வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிக்கு ரூ.36 கோடி நிதி உதவி அறிவித்த அஜித் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அள்ளிக் கொடுத்த தல. கேரள வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு தல அஜீத் சார்பில் ரூ.35 கோடி நிதியுதவி அறிவிப்பு. […]

Continue Reading

‘திராவிட மாடல் ஊழல் முறைகேடு பாலம்’ என்று பரவும் புதுச்சேரி வீடியோ!

பாலத்தில் சிமெண்ட் சாலைக்கு மேல் தார் சாலை அமைக்கப்பட்டது என்று வெளியான வீடியோவை தமிழ்நாட்டில் நடந்தது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலத்தில் சிமெண்ட் சாலைக்கு மேல் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது, பாலத்தில் பள்ளம் உள்ளது, பாலம் கட்டியதில் லஞ்சம், ஊழல் உள்ளது என்று புதுச்சேரியில் உள்ள பாலம் பற்றி ஒருவர் புகார் கூறிய வீடியோ ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 210 கிலோ தங்க சிலை நிறுவப்பட்டதா?

‘’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 210 கிலோ தங்க சிலை நிறுவப்பட்டது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தமிழகத்தில் உலகப் புகழ்பெற்ற மதுரை கோயிலில் 210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்ரீ மீனாட்சி அம்மாவின் விக்கிரகம்.🦜’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

வயநாடு பாதிப்புக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்தாரா விஜய்?

‘’வயநாடு பாதிப்புக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்த விஜய்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’நிலச்சரிவு- நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளா வயநாடு நிலச்சரிவு நிதியுதவியாக தன் சார்பாக 1 கோடியும் தமிழக வெற்றிக் கழகத்தில் சார்பாக 1 கோடியும் மொத்தமாக 2 கோடி வழங்கியுள்ளார் […]

Continue Reading

பிரபாகரன் புகைப்படத்தை வணங்கும் மூதாட்டி என்று பரவும் தகவல் உண்மையா?

‘’பிரபாகரன் புகைப்படத்தை வணங்கும் மூதாட்டி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எப்பேர்ப்பட்ட மாமனிதன் நம்‌ தமிழின தலைவர் 🙏❤️ #தமிழினத்தலைவர்_பிரபாகரன்’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   […]

Continue Reading

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதா?

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட செய்தியை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “உள்ளாட்சித் தேர்தல் தேதி தேர்தல் முடிவு நாள் ஜன.4, வார்டு உறுப்பினர் பதவியேற்பு ஜன.6, மேயர் தேர்வுக்கு மறைமுகத் தேர்தல் ஜன.11. தமிழகத்தில் […]

Continue Reading

தமிழ்நாடு அரசு ரூ.74.8 கோடிக்கு 85 இருசக்கர வாகனங்களை வாங்கியதா?

காவலர்களுக்கு ரூ.74.8 கோடியில் வாங்கப்பட்ட 85 இருசக்கர வாகனங்களை மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னை காவல்துறைக்கு ரூ.74.8 கோடியில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களின் சேவையைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் […]

Continue Reading

‘டெலிபிராம்டர் வைத்துப் பேசும் நரேந்திர மோடி’ என்று நக்கல் செய்தாரா அண்ணாமலை?

டெலிபிராம்டர் வைத்துப் பேசும் மோடி என்று அண்ணாமலை விமர்சனம் செய்ததாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 அண்ணாமலை பேசிய வீடியோவின் ஒரு சிறு பகுதி மட்டும் ஃபேஸ்புக், எக்ஸ் போஸ்டில் பகிரப்பட்டுள்ளது. அதில், “இது வந்துங்க ரூமை பூட்டிட்டு. ஃபிரண்ட்ல ஒரு பிராம்டரை வச்சிக்கிட்டு, அவரு ட்விட்டர்ல […]

Continue Reading

‘சதுரகிரி மலையில் 400 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மஹாமேரு’ என்று பரவும் தகவல் உண்மையா?

சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மஹாமேரு மலர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive மலர் ஒன்றின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அதில், “ஓம் நமச்சிவாய போற்றி 400ஆண்டுக்கு ஒருமுறை சதுரகிரி மலையில் பூக்கும் (மஹாமேரு)பூ இந்ததலை முறையில் பார்க்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அடுத்து எப்போது பார்க்க இதை பகிரவும் […]

Continue Reading

ஆட்சியமைக்க உதவியவர்களுக்கு நிதி ஒதுக்குவதில் என்ன தவறு என்று நிர்மலா சீதாராமன் கேட்டாரா?

ஆட்சியமைக்க உதவியவர்களுக்கு நிதி ஒதுக்குவதில் என்ன தவறு என்றும் 40 தொகுதிகளில் தோற்கடித்தால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டது போன்று ஐந்து நியூஸ் கார்டுகளை ஒன்றாக பகிர்ந்துள்ளனர். அதில், “தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? தமிழ்நாட்டு மக்கள் […]

Continue Reading