
‘’ஒசூரில் பெய்த ஆலங்கட்டி மழை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஒசூரில் பெய்த ஆலங்கட்டி மழை. தலையில் விழுந்தால் அவ்வளவு தான்.Hosur அருகில் செட்டிப்பள்ளி கிராமம் ன்னு வந்தது என்னடா இது எப்படி வேண்டுமானாலும் உலகம் அழியும் போல இது போல் பெரிய பெரிய பனிக்கட்டிகள் மேகத்தில் இருந்து பூமிக்கு வரும் பட்சத்தில் எந்த வித பாதிப்பை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் தொடர்பாக, நாம் விவரம் தேடினோம். அப்போது, இதுபோன்று எந்த செய்தியும் சமீபத்தில் வெளியாகவில்லை, என்று தெரியவந்தது.
அடுத்தப்படியாக, குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, அதனை கூகுள் உதவியுடன் ரிவஸ் இமேஜ் தேடல் செய்தோம்.
அப்போது, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சீனாவில் உள்ள Guangzhou மற்றும் Guangdong பகுதிகளில் இவ்வாறு ஆலங்கட்டி மழை மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததாக, செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.

Oneindia Link l Venezuela News
மேலும் சில செய்தி ஆதாரம் இதோ…
எனவே, சீனாவில் பதிவு செய்யப்பட்ட ஆலங்கட்டி மழை தொடர்பான வீடியோ காட்சியை எடுத்து, ஒசூரில் ஆலங்கட்டி மழை என்று கூறி சமூக வலைதளங்களில் சிலர் வதந்தி பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
