திருப்பதியில் லட்டை புனிதப்படுத்தும் சடங்கின் ஒரு பகுதியாக புனித நீர் தெளித்தபோது எடுத்த புகைப்படத்தை அசைவ உணவுகளுக்கு புனித நீர் தெளித்தது போன்று சிலர் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அசைவ உணவுகள் மீது புனித நீர் தெளிப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "டுடே சேலம் செல்வி மெஸ் ..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆந்திராவில் முந்தைய ஆட்சிக் காலத்தில் திருப்பதி லட்டு தயாரிப்பில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக ஆந்திர மாநில அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து திருப்பதி கோவில் சமையல் அறையின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி அதை சரி செய்ய பூஜை செய்யப்பட்டது.

Comments

புனிதம் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடிட் செய்து, அசைவ உணவுகளின் புகைப்படத்தை வைத்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கிறிஸ்தவர்கள் பாவ மன்னிப்பு கேட்கும் போது இந்துக்களின் இந்த புனிதப்படுத்தும் சடங்கை விமர்சிப்பதா என்று கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.


உண்மைப் பதிவைக் காண: telanganatoday.com I Archive 1 I ndtv.com I Archive 2

இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெளிவாகத் தெரிகிறது. இதை உறுதி செய்ய உண்மையான புகைப்படத்தை தேடினோம். இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களில் இந்த புகைப்படம் வெளியாகி இருந்தது. அதில், பிடிஐ எடுத்த புகைப்படம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பல ஊடகங்களும் இந்த புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தன. இவை எல்லாம் இந்த புகைப்படத்தை எடுத்து எடிட் செய்து தவறாகப் பதிவிட்டிருந்ததை உறுதி செய்கின்றன.


திருப்பதி கோவிலில் நடந்த புனிதப்படுத்தும் சடங்கின் புகைப்படத்தை எடுத்து, அசைவ உணவுகளை புனிதப்படுத்துவது போன்று தவறாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.


முடிவு:

திருப்பதியில் நடந்த புனிதப்படுத்தும் சடங்கு புகைப்படத்தை தவறாக எடிட் செய்து வெளியிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram
Claim Review :   அசைவ உணவுகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டதா?
Claimed By :  Social Media Users
Fact Check :  ALTERED