
‘’குஜராத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தும் பாஜக’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இந்த பதிவில் ‘’ இது தான் ராமராஜ்ஜிய குஜராத் மாடல்…
🤦🤦🤦 “’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாம் மேற்கண்ட வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோ வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட ஒன்று என தெரியவந்தது.
இதன்படி, சில நாட்கள் முன்பாக, வங்கதேச மாடல் மற்றும் நடிகை Misty Subas முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா 78வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்காக, Dhaka University வளாகத்தில் உள்ள Student-Teacher Center (TSC) என்ற இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு கேக் வெட்டி, முடிந்ததும் வெளியே வந்த அவர், டாக்கா பல்கலை வளாகத்தின் முன்பாக, ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அவரை கண்டித்து, தாக்க முயன்றனர். இதனால், ரிக்ஷாவில் ஏறி, Misty Subas தப்பித்தார்.
ஊடகங்கள் பலவும் இந்த செய்தியை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.
The Asian Chronicle l News Lions l Times Now
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:குஜராத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தும் பாஜக என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Pankaj IyerResult: Misleading
