
‘’அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ இன்று நடந்த விமான விபத்து அகமதாபாத்… அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி😭😭😭😭😭” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா, என்று தகவல் தேடினோம். அப்போது, இதற்கும், சமீபத்தில் நடைபெற்ற Ahmedabad Plane Crash செய்திக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது.
ஆம், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ, கடந்த ஜூன் 10ம் தேதி (2025) டெல்லியில் உள்ள Dwarka Sector பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான ஒன்று. ஆனால், அகமதாபாத் விமான விபத்து ஜூன் 12, 2025 அன்று ஏற்பட்டது.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
NDTV l ANI l ET NOW l India Today l Indian Express
எனவே, டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று தொடர்பான வீடியோவை எடுத்து, அகமதாபாத் விமான விபத்துடன் சேர்த்து, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
