
‘’கால்கள் இன்றி சாதித்துக் காட்டிய டிக் டாக் நிறுவனர் மற்றும் தலைவர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ டிக்-டோக்கின் நிறுவனர் மற்றும் தலைவர்….. மனதில் உறுதி இருந்தால் முடியாதது ஏதுமில்லை.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவின் ஃப்ரேம்களை பிரித்தெடுத்து, கூகுள் உதவியுடன் விவரம் தேடினோம்.
அப்போது, இந்த வீடியோவில் இருப்பவர் சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த ‘சென் சோ’ (Chen Zhou) என்று தெரியவந்தது.
இதன்படி, தனது சிறு வயதில் ரயில் விபத்து ஒன்றில் கால்களை இழந்த சென் சோ, மாற்றுத் திறனாளிகளுக்கான இசைக் குழுவில் சேர்ந்து பாடகராக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும், பன்முகத்திறன் கொண்டவராகவும் அறியப்படுகிறார்.
இவர் பற்றி பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

scmp link l chinadaily link l alamy link
அதேசமயம், டிக் டாக் செயலி நிறுவனர் ’ஜாங் யிமிங்’ (Zhang Yiming) வேறொரு நபர் ஆவார்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவுக்கும், டிக் டாக் செயலி நிறுவனர் ஜாங் யிமிங் என்பவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘கால்கள் இன்றி சாதித்த டிக் டாக் நிறுவனர்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Fact Crescendo TeamResult: False
