
‘’தவெக., துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆணவ பேச்சு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ இத்தனை உயிர் இழப்புகள் நடந்தும்
என்ன திமிரா பேசுறான் பாருங்க 😡😡
மக்கள் உயிரை வாங்காம பாலைவனத்தில் போயி அரசியல் பிரச்சாரம் பண்ணு யாரும் தடுக்க மாட்டோம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் தவெக., துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஊடகத்தினரிடம் பேசும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோவுக்கும், சமீபத்தில் விஜய் கரூர் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது.
ஆம், கரூர் துயர சம்பவம் செப்டம்பர் 27, 2025 அன்று ஏற்பட்டது. ஆனால், அதற்கும் முன்பாக, தவெக தலைவர் விஜய் திருச்சி செல்வது பற்றி, அக்கட்சி துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஊடகத்தினரிடம் கடந்த செப்டம்பர் 09, 2025 அன்று விளக்கம் அளித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இது…

Puthiyathalaimurai l Polimer News l Thanthi TV
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பதிவு, அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்படும் வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:தவெக., துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆணவ பேச்சு என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False


