‘’ பாரிஸ் தேவாலயத்தில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ பாரிஸ் தேவாலயத்தில் இருந்து கண்கவர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் காட்சி .

Lighting of the olympic torch, from a París church.

#olimpiadeparis2024 #olimpics #games #reelsviralシ #shorts #trendingreels’’, என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த தகவல் உண்மையா என்று நாம் கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது நமக்கு சில ஆதாரங்கள் கிடைத்தன.

கடந்த ஏப்ரல் 9, 2023 அன்று, Pascua avenger end game 🕊️ என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்ட மேற்கண்ட X பதிவுக்கு, உடனடியாக, Father R. Vierling என்ற கத்தோலிக்க மதகுரு பதில் அளித்துள்ளார். அதில், இத்தாலியில் நடைபெறும் Florentine Easter Tradition நிகழ்வு இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை வைத்து கூடுதல் விவரம் தேடியபோது, கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற Florentine Easter Tradition நிகழ்ச்சி தொடர்பான வீடியோதான் இது, என்று தெரியவந்தது.

நடப்பாண்டில் கூட இந்த நிகழ்வு, கடந்த மார்ச் 31, 2024 அன்று நடைபெற்றதாக, செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 2024 ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வு கடந்த ஏப்ரல் 16 அன்று நேரலை நிகழ்வாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த ஜோதி தொடர் ஓட்டம் மூலமாக, போட்டி நடைபெறும் பாரிஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கிறிஸ்தவ மதம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றை எடுத்து, ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்வுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புகிறார்கள் என்று, தெரியவருகிறது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:பாரிஸ் தேவாலயத்தில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False