காமராஜ் 1975ம் ஆண்டில் உயிரிழந்தார்: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

காமராஜ் காலமானார், என்ற தலைப்பில் ஒரு வைரல் செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Archived Link

Sutralam Suvaikalam என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஏப்ரல் 16ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், தினமணி நாளிதழின் பழைய செய்தியை புகைப்படமாக எடுத்து, பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்துவருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கடந்த 1903ம் ஆண்டு விருதுநகரில் பிறந்தவர் கே.காமராஜ். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பதவி வகித்த இவர், கர்ம வீரர் என்றும், கிங்மேக்கர் என்றும் அரசியல் உலகில் அழைக்கப்பட்டார். இன்றளவும் காமராஜர் போன்ற அரசியல் செல்வாக்கு மிகுந்த தலைவர் இல்லை என்று, தமிழக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், காமராஜர் 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மரணமடைந்தார். இந்த செய்தி, பல்வேறு ஊடகங்களிலும் அன்றைய காலகட்டத்தில் வெளியாகியுள்ளது. இதில், தினமணி நாளிதழ் வெளியிட்ட செய்தியை , காமராஜ் ஆதரவாளர்கள் தற்போது ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து வருகின்றனர். காமராஜ் பற்றி முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, தினமணி வெளியிட்ட செய்தி உண்மைதானா என கூகுளில் தேடிப் பார்த்தோம். 1975ம் ஆண்டு கால கட்டத்தில் இப்போது உள்ளது போல, ஆன்லைன் வசதிகள் இல்லாத காரணத்தால், தினமணியின் அசல் செய்தி ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், அதே செய்தியை பலரும் புகைப்படமாக எடுத்து, தற்போது சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரும் விவரம் கிடைத்தது.

C:\Users\parthiban\Desktop\kamaraj 2.png

இதில் ஒரு புகைப்படத்தை பார்வையிட்டபோது, காமராஜ் இறந்த நாளன்று, அந்த செய்தியை வெளியிட்ட தமிழ் நாளிதழ்களின் அரிய புகைப்படம் என்று கூறி, ஒருவர் ஷேர்சாட்டில் பகிர்ந்திருந்தார். அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\kamaraj 3.png

எனவே, இது உண்மையான புகைப்படம்தான் என உறுதி செய்யப்படுகிறது. தினமணி செய்தியைத்தான் இதில் பகிர்ந்துள்ளனர். இதுதவிர, சொந்த கருத்து எதையும் திணிக்கவில்லை என்பதால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவு, உண்மையான தகவல் கொண்டதுதான் என, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, உண்மையான ஒன்றுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. காமராஜ் மீதுள்ள ஆதரவு மனநிலை காரணமாக பலரும் இதனை அதிகளவில் ஷேர் செய்துவருவதாக, உணர முடிகிறது.

Avatar

Title:காமராஜ் 1975ம் ஆண்டில் உயிரிழந்தார்: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

Fact Check By: Parthiban S 

Result: True

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •