
‘’திமுக கவுன்சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் திறமைகள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதேபோல, மேலும் சில புகைப்படங்களும், வீடியோவும் பகிரப்படுகின்றன. அவற்றையும் கீழே இணைத்துள்ளோம்.

Facebook Claim Link l Archived Link
பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபு என்பவர் தனிப்பட்ட மோதல் காரணமாக, அப்பகுதி கவுன்சிலரால் (சின்னசாமி – திமுக) அடித்துக் கொல்லப்பட்டதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது.
newindianexpress link l thenewsminute link
இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
bbc tamil link l hindutamil link
இத்தகைய சூழலில்தான், மேற்கண்ட வகையில் பாஜக ஆதரவாளர்கள் வீடியோ ஒன்றை தொடர்ச்சியாக, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பற்றி தகவல் தேடியபோது, இதனை சினிமா நடிகர் வித்யூத் ஜமால், அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருப்பதைக் கண்டோம்.
தொடர்ந்து விவரம் தேடுகையில், இதில் இருப்பவர் Anmol Chaudhary என தெரியவந்தது. இவரும் ஒரு ராணுவ வீரர்தான்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுபோன்ற வீடியோ பதிவுகள் நிறைய இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது.

உதாரணத்திற்கு, சில பதிவுகளை கீழே இணைத்துள்ளோம்.
மற்றொரு பதிவு பார்க்க…
எனவே, வேறு ஒரு நபரின் புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை எடுத்து, ராணுவ வீரர் பிரபுவின் திறமைகள் என்று வதந்தி பரப்புவதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:ராணுவ வீரர் பிரபுவின் திறமைகள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
