தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்வதை விமர்சித்து ட்விட்டரில் என் வீடியோ என் ஆடியோ என்று டிரெண்ட் ஆனது. இதை பாஜக-வினர் செய்தனர் என்று தினமலர் செய்தி வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

ட்விட்டர் டிரெண்ட் ஸ்கிரீன்ஷாட் வைத்து தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக் செல்வதை பிரபலப்படுத்தும் வகையில் 'என் வீடியோ என் ஆடியோ' என்கிற ஹேஸ்டேக்கை பாஜகவினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நியூஸ் கார்டை 🖤♥️தூய துறவி

@iam_Vsk என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 28ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக தலைவர் என் மண், என் மக்கள் என்ற கோஷத்துடன் பாத யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார். இதை விமர்சிக்கும் வகையில் என் வீடியோ என் வீடியோ என்று ஹேஷ்டேகை தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். ட்விட்டரில் இந்திய அளவில் இது ட்ரெண்ட் ஆனது.

இந்த நிலையில் இது பற்றி தினமலர் நியூஸ் கார்டு வெளியிட்டது போலவும், அதுவும் என் வீடியோ என் ஆடியோவை பாஜக-வினர் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் என்பது போலவும் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பாஜக எதிர்ப்பு விஷயங்கள் பற்றி பெரும்பாலும் தினமலர் செய்தி வெளியிடுவது இல்லை. அண்ணாமலையின் என் மண், என் மக்கள் லோகோவை மாற்றி எல்லாம் அது வெளியிட வாய்ப்பே இல்லை. எனவே, இது போலியான நியூஸ் கார்டு என்று தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

முதலில் இப்படி ஏதேனும் நியூஸ் கார்டை தினமலர் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அதில் "அண்ணாமலை பாத யாத்திரை இன்று (ஜூலை 28) ராமேஸ்வரத்தில் துவங்க உள்ள நிலையில் #EnMannEnMakkalஎன்ற ஹாஷ்டேகை தமிழக பா.ஜ.க.,வினர் இந்திய அளவில் டிரெண்டாக்கி உள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவானது.

இதை மேலும் உறுதி செய்துகொள்ள, தினமலர் நாளிதழ் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இந்த நியூஸ் கார்டு பற்றி விசாரித்தோம். நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் என் வீடியோ என் ஆடியோ டிரெண்ட் ஆனது என்று தினமலர் வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியாகிறது.

முடிவு:

அண்ணாமலையை விமர்சிக்கும் என் வீடியோ, என் ஆடியோ ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது என்று தினமலர் வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘என் வீடியோ_என் ஆடியோ’ ஹேஷ்டேக் டிரெண்ட் என்று தினமலர் நியூஸ் கார்டு வெளியிட்டதா?

Written By: Chendur Pandian

Result: False