முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மெயின் ரோடு என்று விமர்சித்தாரா எ.வ.வேலு?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மெயின் ரோடு என்று அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு, அ.தி.மு.க நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் ஆகியோர் புகைப்படங்களுடன் கூடிய மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஈசிஆருக்கு கருணாநிதி பெயர் – அமைச்சர் பதிலடி. ECR ரோட்டுக்கு பெயர் மாத்தினா மெயின் ரோட்டுக்கு ஏன் கோபம் வருது? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டை AV Ramesh MBA என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மே 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலைக்கு பெயர் மாற்றம் செய்யப்போவதாக கடந்த 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போதே அது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இப்போது புதிதாக அறிவிப்பு வெளியிட்டது போன்றும், அதற்கு எதிர்ப்பு எழுந்தது போலவும் சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கார்டில் 04.05.2022 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வருடத்தைக் கவனிக்காமல், தேதி, மாதத்தை மட்டும் பார்த்துவிட்டு புதிதாக வெளிவந்த நியூஸ் கார்டு போன்று சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது பழைய நியூஸ் கார்டு என்பதால் தேடுவது சற்று கடினமாக இருந்தது. மாலை முரசு ஃபேஸ்புக் பக்கத்தில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடிய போது, 2022 மே 4ம் தேதி வெளியான உண்மையான நியூஸ் கார்டு நமக்குக் கிடைத்தது. அதில், “கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி சாலை பெயர் சூட்டுவதால் தமிழக மக்களுக்கு எந்த குழப்பமும் வராது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து பகிர்ந்திருப்பது தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ள மாலை முரசு தொலைக்காட்சி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். ஆசிரியர் குழு நிர்வாகி நம்மிடம் பேசினார். எ.வ.வேலு தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ் கார்டு பற்றி கேட்டோம். அதற்கு அவர், அது போலியான நியூஸ் கார்டு என்றார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதியாகிறது.

எ.வ.வேலு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மெயின் ரோடு என்று விமர்சித்தாரா என்று தேடிப் பார்த்தோம்.2022ல் எ.வ.வேலு அளித்த பேட்டி தொடர்பான செய்திகள் நமக்குக் கிடைத்தன. எதிலும் மெயின் ரோடு என்று விமர்சித்ததாகக் குறிப்பிடப்படவில்லை. வீடியோ கிடைக்கிறதா என்று பார்த்தோம். எ.வ.வேலு பேட்டியை நியூஸ்7 தமிழ் வெளியிட்டிருந்தது. அவர் மெயின் ரோடு என்று எ.வ.வேலு விமர்சிக்கவில்லை. இதன் மூலம் இந்த தகவலும் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ‘மெயின் ரோடு’ என்று அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மெயின் ரோடு என்று விமர்சித்தாரா எ.வ.வேலு?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply