
‘’உத்தரப் பிரதேசத்தில் 6 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தவனை என்கவுன்டர் செய்து ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் ஷர்மா அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

கிராமத்து இளைஞனின் நாளைய விடியல்கள் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஜூன் 24ம் தேதி வெளியிட்டுளளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது போல, ஏதேனும் என்கவுன்டர் சம்பவம் நடைபெற்றதா என கூகுள் சென்று ஆதாரம் தேடினோம். அப்போது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்படியான சம்பவம் சமீபத்தில் நடைபெற்றதாக விவரம் கிடைத்தது.

இதன்படி, உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் நஜில் என்ற நபர், கடந்த மே 7ம் தேதியன்று சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து கொன்றுள்ளான். அந்த சடலத்தை தன்னுடனேயே வைத்திருந்துள்ளான். அந்த நபரை அஜய் பால் சர்மா தலைமையில் சென்ற போலீஸ் படை, சுட்டுப் பிடித்துள்ளனர். இவ்வாரம் திங்களன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனிடம் இருந்து சிறுமியின் சடலத்தையும் போலீசார் மீட்டுள்ளனர்.

இதுபற்றி டைம்ஸ் நவ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், குற்றவாளியின் இரண்டு கால்களிலும் சுட்டதன் மூலமாக, அவனை பிடித்ததாகவும், தனக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி எனவும் ஐபிஎஸ் அதிகாரி அஜய் சர்மா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தனது அதிரடி செயல் காரணமாக, உத்தரப் பிரதேச மக்களிடையே பெரும் பாராட்டுகளை அஜய் சர்மா பெற்று வருகிறார். இந்நிலையில்தான், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதுபோல, குற்றவாளியை என்கவுன்டர் செய்துதான் அஜய் சர்மா கைது செய்திருக்கிறார். அதேசமயம், சிலர் குற்றவாளியை சுட்டுக் கொன்றதாகக் கூறிவருகிறார்கள். அந்த செய்தியில் உண்மையில்லை.
இதுதொடர்பாக, நமது குஜராத்தி பிரிவு உண்மை கண்டறியும் ஆய்வு ஒன்றை நடத்தி முடிவுகளை சமர்பித்துள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவு உண்மையான ஒன்றுதான் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு உண்மையானதுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழலில், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் சுட்டுப் பிடித்ததால், பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதன் அடிப்படையிலேயே மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருவதை உணர முடிகிறது.

Title:சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற நபரை சுட்டுப் பிடித்த ஐபிஎஸ் அதிகாரி அஜய் சர்மா!
Fact Check By: Parthiban SResult: True
