பாகிஸ்தான் பெண்ணிடம் காதலை சொன்ன இந்தியர்: புதிய தலைமுறை செய்தி உண்மையா?

சமூக ஊடகம்

‘’பாகிஸ்தான் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய இளைஞர்,’’ என்ற தலைப்பில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\puthiya thalaimurai 2.png

Facebook Link I Archived Link

இதே செய்தி புதிய தலைமுறை இணையதளத்திலும் பகிரப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

இந்த செய்தியை உண்மை என நினைத்து பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
புதிய தலைமுறை இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின் முழுவிவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

C:\Users\parthiban\Desktop\puthiya thalaimurai 3.png

இந்த செய்தியில், கடந்த ஜூன் 16ம் தேதி இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடைபெற்றபோது, பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணிடம் இந்திய இளைஞர் காதலை வெளிப்படுத்தினார் எனக் கூறப்பட்டுள்ளது.

C:\Users\parthiban\Desktop\puthiya thalaimurai 4.png

இதன்பேரில், பாகிஸ்தான் பெண்ணிடம் இந்தியர் யாரேனும் மைதானத்தில் வைத்து காதலை சொன்னாரா என ஆதாரம் தேடிப் பார்த்தோம். அப்போது, சில செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.

C:\Users\parthiban\Desktop\puthiya thalaimurai 5.png

இதன்படி, எந்த செய்திலும், அந்த பெண் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்படவில்லை. ‘’இந்தியரான அவரும், குறிப்பிட்ட இளைஞரும் நீண்ட நாளாக பழகிவந்த நிலையில், மைதானத்தில் இருவரின் குடும்பமும் ஒன்றாக இருக்கும்போது, அவர் தனது காதலை வெளிப்படுத்தினார்,’’ என்றுதான் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

C:\Users\parthiban\Desktop\puthiya thalaimurai 6.png

இதுபற்றி இந்தியா டுடே வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதேபோல, நியூஸ்18 வெளியிட்ட செய்தி விவரம் கீழே தரப்பட்டுள்ளது. செய்தி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\puthiya thalaimurai 7.png

இதன்படி, குறிப்பிட்ட பெண்ணே, இந்த வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்ற விவரமும் தெரியவந்தது. அவரது ட்விட்டர் புரொஃபைல் சென்று பார்த்தபோது, அவரது பெயர், அன்விதா என்றும், இந்திய கிரிக்கெட் ரசிகை என்றும் தெரியவந்தது. அன்விதா என்பது இந்து பெயராகும்.

மேலும், நமக்கு கிடைத்த செய்திகள் அனைத்திலும் குறிப்பிட்ட பெண், குறிப்பிட்ட இளைஞர் நீண்ட காலமாக நண்பர்களாக பழகி வந்த நிலையில், அந்த இளைஞர் காதலை வெளிப்படுத்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால், புதிய தலைமுறை செய்தியில் மட்டும் அப்பெண்ணை பாகிஸ்தானைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய தலைமுறையின் ஃபேஸ்புக் பதிவிலேயே இந்த தவறை வாசகர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். அந்த பெண் இந்தியாவை சேர்ந்தவர் என்றும், இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் சிலர் கமெண்ட் பகிர்ந்துள்ளனர். ஆனால், இதுபற்றி புதிய தலைமுறை கவனிக்கவில்லை போலும்.

C:\Users\parthiban\Desktop\puthiya thalaimurai 9.png

ஒரு முன்னணி தமிழ் ஊடகம் இப்படி தவறான செய்தி வெளியிட்டு, வாசகர்களை குழப்பியது பார்ப்பதற்கு அதிர்ச்சியாக உள்ளது. செய்தியின் பரபரப்புக்காக, இப்படி அவசர கதியில் தவறான செய்தி வெளியிட்டிருக்கலாம் என தெரிகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல் தவறானது என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட புதிய தலைமுறை செய்தி தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:பாகிஸ்தான் பெண்ணிடம் காதலை சொன்ன இந்தியர்: புதிய தலைமுறை செய்தி உண்மையா?

Fact Check By: Parthiban S 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •