
‘’பிரசாந்த் கிஷோர் என்ன, யார் வந்தாலும் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து மோடிஜி காலடியில் சமர்ப்பிப்போம்,’’ என்று ஓபி ரவீந்திரநாத் எம்பி கூறியதாகப் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
உண்மை அறிவோம்:
திமுக.,வுக்கு வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆலோசனை வழங்குவதற்காக, பிரசாந்த் கிஷோரை அக்கட்சி ஆலோசகராக நியமித்துள்ளது. இதையொட்டி பலரும் சமூக ஊடகங்களில் பலவிதமான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் இன்று (பிப்ரவரி 03, 2020) அன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி முதல் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்தான் மேற்கண்ட வதந்தி வெளியாகியுள்ளது.
உண்மையில் இப்படி எதேனும் செய்தி வெளியானதா என்ற சந்தேகத்தில் தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் (@ThanthiTV) தகவல் தேடினோம். அப்போது இதுதொடர்பான உண்மை செய்தி விவரம் கிடைத்தது. அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Thanthi TV FB Post Link | Archived Link |
எனவே, தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை எடுத்து, போலியாக சித்தரித்து வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் பகிரப்பட்டுள்ளதாக, நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பிரசாந்த் கிஷோருக்கு சவால் விட்ட ஓபி ரவீந்திரநாத் குமார்?- தந்தி டிவி பெயரில் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False
