‘’அமெரிக்க மக்கள் நிறவெறிக்கு எதிராக பறை இசைத்து எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த வீடியோ, கடந்த ஜூன் 6ம் தேதி முதலாக, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் டிரெண்டிங் ஆகி வருகிறது.

Archived Link

இந்த வீடியோ பற்றி அதிர்வு இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றில், இது கனடாவில் நிகழ்ந்ததாகவும், ஈழத்தமிழர் ஒருவர் பறை அடித்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

Athirvu news linkArchived Link

இதேபோல, வேறு சில பதிவுகளில் இது அமெரிக்காவை அதிர வைத்த பறை இசை என்று மொட்டையாக தலைப்பிட்டிருந்தனர்.

Archived Link

உண்மை அறிவோம்:
மேற்குறிப்பிட்ட வீடியோவில் தமிழர் ஒருவர் பறை இசைக்க, ஆப்ரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய இன மக்கள் ஆண், பெண் பேதமின்றி உற்சாகமாக ஆடுவதைக் காண முடிகிறது. இறுதியாக, பறை இசைத்த நபருக்கு அனைவரும் பாராட்டு தெரிவிக்கின்றனர். பார்ப்பதற்கு சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுபடுத்துவதாக இந்த வீடியோ உள்ளது.

எனினும், இது அமெரிக்காவில் நடைபெற்ற நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவா என்பது சந்தேகமாகவே உள்ளது. உண்மையில் இந்த வீடியோ ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டதாகும்.

Archived Link

இந்த வீடியோவின் தொடர்ச்சியை குறிப்பிட்ட போராட்டத்தில் பங்கேற்ற நபர் ஒருவரே நேரடியாக ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

Archived Link

இந்த பதிவிலேயே, பறை அடித்தவரின் பெயர் (பாலமுருகன் திருமேனி), இதனை முன்னெடுத்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர், அமைப்பின் விவரங்களை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.

ATACDC (Australia Tamil Arts- Sydney NSW Chapter) என்ற அமைப்பைச் சேர்ந்த பாலமுருகன் திருமேனிதான் இதில் பறை இசைக்கும் நபர். இதுபற்றி News Minute ஊடகம் கூட விரிவான செய்தியை வெளியிட்டிருக்கிறது.

TheNewsMinute LinkArchived Link

மேலும் பல வெளிநாட்டு ஊடகங்களும் இதுபற்றிய செய்தியை வெளியிட்டுள்ளதைக் காண முடிகிறது.

Newsdogapp linkTamilguardian link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) அமெரிக்காவில் நிலவும் நிறவெறி அடக்குமுறையை எதிர்த்து, ஆஸ்திரேலிய மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்த போராட்டத்தில் பறை இசைத்துள்ளனர்.

2) இதனைச் சிலர் கனடாவில் நிகழ்ந்தது, அமெரிக்காவில் நிகழ்ந்தது என்று கூறி உண்மையுடன் தவறான தகவலை சேர்த்து பகிர்ந்து வருகின்றனர்.

3) அமெரிக்காவிற்கு எதிராக நடந்த போராட்டம்தான்; ஆனால், அது ஆஸ்திரேலியாவில் நடந்ததாகும்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட வீடியோ பற்றி சிலர் தவறான தலைப்பிட்டு செய்தி பகிர்ந்து வருவதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் எமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:இந்த பறை இசைக்கும் வீடியோ எங்கே எடுக்கப்பட்டது தெரியுமா?

Fact Check By: Pankaj Iyer

Result: Partly False