
ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவா சமீபத்தில் நடித்துள்ள ஒரு விளம்பர படத்தால் சமூக ஊடகங்களில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஜேசன் இவ்வளவு நாள் பில்டப் கொடுத்து, போலியான கெட்டப்பில் ரசிகர்களை ஏமாற்றி வந்ததாகவும் பலர் அதிருப்தி தெரிவிப்பதை காண முடிகிறது. இதுபற்றிய உண்மை கண்டறியும் சோதனையே இந்த செய்தித் தொகுப்பு.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
இந்த ஃபேஸ்புக் பதிவில், ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவா நடித்துள்ள புதிய விளம்பர படத்தை பகிர்ந்து, அதன் மேலே, பல பேர் வாழ்க்கை இப்படித்தான் பில்டப்புலேயே ஓடுது, என சம்பந்தப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் இது உண்மையா என சந்தேகம் எழுப்பி, கமெண்ட் பகிர்வதையும் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட விளம்பரம் தனிப்பட்ட வகையில் ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். சந்தேகம் இருந்தாலும் மீண்டும் ஒருமுறை அதன் முழு வீடியோவையும் கீழே கிளிக் செய்து பாருங்கள்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தமிழகம் மட்டுமின்றி, உலக அளவில் சமூக ஊடகங்களில் புலம்பி தீர்க்கவே, இதுபற்றி விளக்கம் அளித்து ஜேசன் மோமோவா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதவிர மேற்கண்ட விளம்பர படம் எப்படி எடுக்கப்பட்டது என்பது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இந்த விளம்பர படத்தை எடுத்த அதே விளம்பர நிறுவனம் தனது யூ டியுப் பக்கத்தில் Behind The Scenes எனக் குறிப்பிட்டு ஒரு பிரத்யேக வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அதனை ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.
எனவே, ஒல்லியான ஒரு இளைஞரை டூப் செய்து, அவருக்குப் பதிலாக ஜேசனின் முகத்தைப் பொருத்தி, ஜேசன்தான் ஒல்லியாக இருப்பதுபோல ஒரு மாய தோற்றத்தை கிராஃபிக்ஸ் உதவியுடன் ஏற்படுத்தியுள்ளனர் என்று தெளிவாகிறது. குறிப்பிட்ட விளம்பர படத்தையும், அது எப்படி உருவாக்கப்பட்டது என்பது தொடர்பான காட்சிகளையும் கம்பேர் செய்து நாம் ஒரு வீடியோ தயாரித்துள்ளோம். அதனை கீழே நீங்கள் பார்க்கலாம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் உண்மையும், பொய்யும் கலந்து தயாரிக்கப்பட்ட ஒரு விளம்பர படத்தை பகிர்ந்து, வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.
Title:ஜேசன் மோமோவா நடித்துள்ள விளம்பர படத்தால் சர்ச்சை: உண்மை அறிவோம்!
Fact Check By: Pankaj Iyer