‘ஆரத்தி எடுத்த பெண்ணுக்குப் பணம் கொடுத்த அண்ணாமலை’ என்று பகிரப்படும் பழைய வீடியோ…   

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘‘ஆரத்தி எடுத்த பெண்ணுக்குப் பணம் கொடுத்த அண்ணாமலை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ த்தா எவ்வளவு நேக்கா கொடுக்குறான் பாருங்க,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link 

மக்களவைத் தேர்தல் 2024 பிரசாரம் சூடு பிடித்துள்ளதால், இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வீடியோ தற்போதைய மக்களவைத் தேர்தல் (2024) பிரசாரத்தின்போது எடுக்கப்பட்டதா, என்று தகவல் தேடினோம். அப்போது, இது கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம், ராமாநாதபுரம் மாவட்டத்தில் அண்ணாமலை “என் மண் என் மக்கள்”யாத்திரையை தொடங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ, என்று பாலிமர் டிவி தரப்பில் கூறப்பட்டது. 

Dailythanthi Link l vikatan link

மேலும், இந்த வீடியோ தற்போது வைரலாகப் பகிரப்படுவதால், இதுபற்றி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் (அண்ணாமலை போட்டியிடும் தொகுதி) தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘’இது கடந்த 2023 ஜூலையின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை காவல்துறை விசாரணையின் மூலம் அறிய முடிகிறது. இது குறித்து பரவும் தவறான செய்திகள், காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று அவர் தெரிவித்துள்ளார். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவுக்கும், தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கும் தொடர்பில்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:‘ஆரத்தி எடுத்த பெண்ணுக்குப் பணம் கொடுத்த அண்ணாமலை’ என்று பகிரப்படும் பழைய வீடியோ…

Written By: Fact Crescendo Team 

Result: Misleading

Leave a Reply