
‘’கரடி குகையில் இரைக்காக பிடித்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய வேட்டைக்காரர் உயிருடன் மீட்பு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Kalaignar Seithigal இந்த செய்தியை கடந்த ஜூன் 27, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதே செய்தியை தனது இணையதளத்திலும் பகிர்ந்துள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதே செய்தியை மனிதன் இணையதளமும் பகிர்ந்துள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Facebook Link I Archived FB Link I News Link I Archived News Link
இதுபோல ஃபேஸ்புக்கில் பலரும் இந்த செய்தியை உண்மை என நினைத்து ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படத்தின் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்வதற்காக, அதனை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுபற்றிய விவரங்கள் கிடைத்தன.

இதுபற்றி இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி, உலகில் உள்ள முன்னணி ஊடகங்களும் செய்தி வெளியிட்ட நிலையில், இது உண்மையான எனச் சிலர் ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இதன்படி, இந்த நபர் ரஷ்யாவைச் சேர்ந்த வேட்டைக்காரர் இல்லை. அவரை கரடி எதுவும் தாக்கவும் இல்லை என தெரியவருகிறது. அந்த நபர் கஜகஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு தோல் பாதிப்பு உள்ளது என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரே மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி www.express.co.uk இணையதளம் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, www.ladbible.com வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இச்செய்தியின் ஒரு பகுதி இங்கே ஆதாரத்திற்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இப்படி ஒரு சம்பவம் 2014ல் நடந்துள்ளது. அதில் பாதிக்கப்பட்ட நபர் உயிருடன் ஆர்க்டிக் துருவப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். அந்த நபர் வேறு. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இருக்கும் நபர் வேறு. அந்த வீடியோ நமது ஆதாரம் மற்றும் விளக்கத்திற்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தி சன் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல் தவறு என்று உறுதி செய்யப்படுகிறது. இதுபற்றி உலகம் முழுவதும் பரபரப்பாக செய்தி பரவிய நிலையில், இதன் மீது சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்து, இங்கிலாந்தைச் சேர்ந்த ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அதை நமது ஆதாரத்திற்காக மேலே பதிவு செய்துள்ளோம். அத்துடன், கரடியால் தாக்கப்பட்ட நபர் வேறு ஒருவர் என்றும், அதற்கான ஆதாரத்தையும் இணைத்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள் இத்தகைய செய்திகளை பார்த்து குழப்பமடைய வேண்டாம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்திகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு உறுதி செய்யாமல் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கரடி குகையில் ஒரு மாதம் பிடித்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய வேட்டைக்காரர்: உண்மை அறிவோம்!
Fact Check By: Pankaj IyerResult: False
