அர்ஜூன் சம்பத் மது அருந்தும் புகைப்படம் உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழகம்

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், மது அருந்துவது போன்று புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

அர்ஜூன் சம்பத் ஒரு அறையில் சிலருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய மேசை மீது மது பாட்டில்கள் உள்ளன. படுக்கையில் அமர்ந்துள்ள ஒருவர் கையில் மது கிளாஸ் உள்ளது. இந்த படத்தை Troll 420 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 பிப்ரவரி 19ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படத்தைப் பார்க்கும்போது குறிப்பாக படுக்கையில் அமர்ந்திருக்கும் நபர் கையில் உள்ள மது கிளாஸ் உள்ளிட்டவை இது போட்டோஷாப் செய்யப்பட்டது என்பதைக் காட்டியது. இதை உறுதி செய்ய fotoforensics.com பக்கத்தில் இந்த படத்தை பதிவேற்றித் தேடினோம். அப்போது, மதுபாட்டில், கையில் மதுக்கோப்பை மட்டும் தனியாக சேர்க்கப்பட்டது என்பதற்கு ஆதாரமாக அதில் நிற வேறுபாடுகள் இருப்பதைக் காண முடிந்தது.

அசல் படம் கிடைக்கிறதா என்று ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆனால், எந்த படமும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அர்ஜூன் சம்பத் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் இந்த படத்தை பதிவேற்றம் செய்துள்ளாரா என்று கண்டறிய அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். அதில் நமக்கு இது தொடர்பான படம் கிடைக்கவில்லை.

படத்தில் உள்ள நபர்கள் யார் என்று பார்த்தபோது, கையில் பியர் கிளாசுடன் இருப்பவர் கிஷோர் கே சுவாமி போல தெரிந்தது. எனவே, அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பான படம் கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்போது. அசல் படம் கிடைத்தது. அந்த படத்தில் மது பாட்டில் எதுவும் இல்லை. 

Facebook LinkArchived Link

இந்த புகைப்படத்தை எடுத்து, எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் என்று தெளிவாகிறது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அர்ஜூன் சம்பத் மது அருந்தும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •