
‘’சூர்யா கேள்வி கேட்க, அவர் இந்திய குடிமகன் என்ற தகுதி போதுமானது,’’ என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாகக் கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Pradeepraja Arya என்பவர் கடந்த ஜூலை 28, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், தந்தி டிவியின் யூ டியூப் வீடியோ ஒன்றின் லிங்கை இணைத்தும் உள்ளார்.
உண்மை அறிவோம்:
முதலில் குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தந்தி டிவி யூ டியுப் லிங்கை கிளிக் செய்து பார்த்தோம். அதில், மயில்சாமி அண்ணாதுரை மற்றும் சினிமா இயக்குனர் லெனின்பாரதி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றை பற்றிய செய்தி அதில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், செய்தியின் தலைப்பில், ‘’சூர்யா கேள்வி கேட்க, இந்திய குடிமகன் என்ற தகுதி போதுமானது- மயில்சாமி அண்ணாதுரை’’ என தலைப்பிட்ட தந்தி டிவி, செய்தியின் உள்ளே, இந்த கேள்வியை லெனின் பாரதி கேட்டதாகக் கூறுகிறது. அத்துடன் மயில்சாமி அண்ணாதுரை பேசியது வேற விசயமாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, செய்தியின் தலைப்பில் மயில்சாமி அண்ணாதுரை இவ்வாறு கூறினார் எனச் சொல்லும் இவர்கள் செய்தியின் உள்ளே, ‘’விஞ்ஞானியான தனக்கு தமிழ், ஆங்கிலம்தான் தெரியும். சூர்யா போல நானும் நீண்ட நாளாக மும்மொழிக் கொள்கை பற்றி விமர்சனம் தெரிவித்து வருகிறேன்,’’ என்று மயில்சாமி பேசியதாகக் குறிப்பட்டுள்ளனர்.
அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு விருந்தினரான சினிமா இயக்குனர் லெனின்பாரதிதான், ‘’சூர்யா கேள்வி கேட்க இந்திய குடிமகன் என்ற தகுதி போதும்,‘’ எனப் பேசியதாக, தந்தி டிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே செய்தியை தங்களது இணையதளத்திலும் தந்தி டிவி பகிர்ந்துள்ளது. அந்த செய்தியில் தலைப்பு தவறாகவும், செய்தியின் உள்ளே லெனின்பாரதி இப்படி பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறாகவும், வாசகர்களை குழப்புவதாகவும் உள்ளதென்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த தகவலின் தலைப்பு தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ எதையும் உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சூர்யா கேள்வி கேட்க இந்திய குடிமகன் என்ற தகுதி போதும் என்று மயில்சாமி அண்ணாதுரை சொன்னாரா?
Fact Check By: Pankaj IyerResult: False Headline
