பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற கடைசி கப்பலின் புகைப்படம் இதுவா?

சமூக ஊடகம்

‘’வெள்ளைக்காரன் நம் நாட்டை காலி பண்ணிட்டு போன கடைசி கப்பலின் படம்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\british 2.png

Facebook Link I Archived Link

Ponni Ravi என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’வெள்ளைக்காரன் நம் நாட்டை காலி பண்ணிட்டு போன கடைசி கப்பலின் படம்,’’ என்று கூறி ஒரு கப்பலின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள புகைப்படம் உண்மையானதுதானா என்ற சந்தேகத்தில் கூகுளில் அதனை பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது உண்மையான புகைப்படம்தான் என்ற விவரம் கிடைத்தது. ஆனால், இது பிரிட்டிஷார் சென்ற கடைசி கப்பல் என்று எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன், கிடைத்த ஆதாரங்கள் அனைத்திலும் இந்த கப்பலில் இந்தியா முழுவதிலும் பணிபுரிந்துவந்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள்தான் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\british 3.png

இதுபற்றி மேலும் கூடுதல் தகவல் தேடினோம். அதில், இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, 1947ம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் வசித்து வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், படை வீரர்கள் உள்ளிட்டோர் ஒவ்வொரு கப்பலாக, புறப்பட்டுச் சென்றதாக, தெரியவந்தது. இதன்படி, நாம் ஆய்வு செய்யும் கப்பலின் புகைப்படம் மும்பை துறைமுகத்தில் எடுக்கப்பட்டதாகும். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே மற்றும் இங்கே கிளிக் செய்யவும். 

C:\Users\parthiban\Desktop\british 4.png

இதன்பின் மேலும் விரிவான தேடலின்போது, மேற்கண்ட புகைப்படத்தில் இருக்கும் கப்பலின் பெயர் Georgic என்றும், அதுதொடர்பான வீடியோ காட்சியும் கிடைத்தது.

ஆனால், இதுவே பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்து வெளியேறும் கடைசி கப்பல் கிடையாது. 1947ம் ஆண்டு முதல் படிப்படியாக இந்தியாவை விட்டு வெளியேற தொடங்கிய பிரிட்டிஷ் படைகளின் கடைசிப் பிரிவு அடங்கிய கப்பல், 1948ம் ஆண்டு மும்பையில் இருந்து புறப்பட்டுள்ளது. வேண்டுமானால், இதைத்தான் பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்து புறப்பட்ட கடைசி கப்பல் என்று சொல்லலாம். அதன் வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

இறுதியாக, இந்தியாவில் இருந்த பிரிட்டிஷார் அனைவரும் 1948ம் ஆண்டுடன் வெளியேறிவிடவில்லை. பிரிட்டிஷ் படைகள் இந்தியாவில் இருந்து வெளியேறவே, 1947 முதல் 1948 பிப்ரவரி 28 வரை அவகாசம் தேவைப்பட்டது. இதுதவிர, மவுண்ட் பேட்டன் 1948 ஜூன் மாதத்தில் இந்தியாவில் இருந்து கிளம்பினார். மேலும், நேருவின் வேண்டுகோளை ஏற்று, சில பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள், படையினர் இந்தியாவிலேயே தங்கவும் நேரிட்டது. அத்துடன், சில ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் மக்கள் இந்தியாவிலேயே தங்கள் தொழிலை அமைத்துக் கொண்டு, வாழவும் பழகிவிட்டனர். எனவே, இந்தியாவில் இருந்து பிரிட்டிஷார் வெளியேறியது இவர்கள் குறிப்பிடுவது போல ஒரே நாளில், ஒரே கப்பலில் நிகழ்ந்துவிடவில்லை. அது படிப்படியாக, சில ஆண்டுகளுக்கு நீடித்த விசயமாகும். இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

C:\Users\parthiban\Desktop\british 5.png

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கும்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் முழுமையானது இல்லை. அதில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற கடைசி கப்பலின் புகைப்படம் இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •