
‘’சோனியா காந்தி 1988 முதல் காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ளார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

போங்கடா முட்டாப் பசங்களா என்ற ஃபேஸ்புக் ஐடி, ஆகஸ்ட் 15, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளின் தலைவராக இருந்தவர்களின் பட்டியலை பகிர்ந்து, ‘’1988 முதல் கட்சித் தலைவராக உள்ளவர்களின் பட்டியல், இதிலிருந்தே எது குடும்ப கட்சி, எது ஜனநாயக கட்சி என தெரிந்துகொள்ளலாம்,’’ என்று கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் சொல்வது போல, 1988 முதல் பாஜக தலைவராக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, குஷாபு தாக்கரே, பங்காரு லஷ்மன், ஜன கிருஷ்ணமூர்த்தி, வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அமித் ஷா உள்ளிட்டோர் பதவியில் மாறி மாறி இருந்து வந்துள்ளனர். இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, திமுக.,வின் பொதுச் செயலாளராக ஆரம்பத்தில் அண்ணா கட்சியை கட்டுப்படுத்தி வந்தார். தலைவர் பதவியை காலியாக வைத்திருந்தார். ஆனால், 1969ல் அண்ணா மறைவுக்குப் பின், தலைவர் பதவியை பிடித்துக் கொண்ட கருணாநிதி, 2018ல் தான் சாகும் வரை கட்சியின் தலைவராக இருந்தார். எனவே, திமுக பற்றிய தகவலும் உண்மைதான். இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1988 முதல் சோனியா இருந்தார் என்பது தவறான தகவல். 1988ல் தொடங்கி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், சீதாராம் கேசரி உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்துள்ளனர். 1998ம் ஆண்டில்தான், காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா பதவிக்கு வந்தார். இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் கலந்துள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் உண்மையும், பொய்யும் கலந்துள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சோனியா காந்தி 1988 முதல் காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ளாரா?
Fact Check By: Pankaj IyerResult: Mixture
