‘’இதோ லோஸ்லியாவின் புகைப்படம்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

உன் நினைவுகளோடு நான் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், சிவகுமார், ரோஜா, மோனிகாவின் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், லோஸ்லியா இதில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
சம்பந்தப்பட்ட பதிவில் கூறியுள்ளது போல, ரோஜா – செல்வமணி, சிவகுமார் குடும்பம் மற்றும் மோனிகா திருமண புகைப்படம் அனைத்தும் உண்மைதான். மோனிகா இஸ்லாமியராக மாறி, பின்னர் இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டதும் உண்மையே. அதற்கான வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பதிவில் லொஸ்லியாவின் புகைப்படம் என்று கூறி, வேறொரு தொடர்பில்லாத புகைப்படத்தை இணைத்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமாகியுள்ள லொஸ்லியாவின் உண்மையான புகைப்படம் அடங்கிய வீடியோ ஒரு ஆதாரத்திற்காக கீழே தரப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் லைக், ஷேர் வாங்கும் ஆசையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் லொஸ்லியா புகைப்படம் இதோ, என்று கூறி பதிவிட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், அது லொஸ்லியாவின் புகைப்படம் இல்லை.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இதோ லோஸ்லியாவின் புகைப்படம்: குழப்பும் ஃபேஸ்புக் பதிவு…

Fact Check By: Pankaj Iyer

Result: Mixture