
‘’இரண்டு தலை உள்ள அதிசய மீன்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
தினம் ஒரு தகவல் என்ற ஃபேஸ்புக் ஐடி, ஆகஸ்ட் 23, 2018 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஒரு மீனின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’என்ன அதிசயம் இரட்டை தலை மீன் பார்ததும் ஷேர் பண்ணுங்க ஒரு மணி நேரத்தில் நல்ல செய்தி உங்களை தேடி வரும்…,’’ என எழுதியுள்ளனர். இதனை உண்மை என நம்பி சுமார் 55,000 பேர் ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவின் கமெண்டிலேயே இது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என்றும், உண்மையானதில்லை என்றும் நிறைய பேர் குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும், கொஞ்சம் கூட மூளையை பயன்படுத்தி யோசிக்காமல் 55,000 பேர் இதனை ஷேர் செய்திருக்கிறார்கள்.
இதைப் பார்த்தாலே, எளிதாக போட்டோஷாப் செய்யப்பட்டதாக, தெரிகிறது. இருந்தாலும், ஒரு சந்தேகத்திற்கு, அதனை பகுப்பாய்வு செய்தோம். இந்த புகைப்படத்தில் உள்ள ஃபோட்டோஷாப் அறிகுறிகள் என்னவென்று, கீழே இணைத்துள்ளோம்.
எங்கேயும் இப்படி இரு புறமும் தலையுள்ள மீன் அல்லது உயிரினம் இருக்க வாய்ப்பில்லை. அதாவது, மீனுக்கு தலை, வால்தான் இருக்கும். ஒருவேளை 2 தலை இருந்தால், அவை ஒட்டி ஒட்டியே இருக்க வேண்டும். மனிதர்களில் கூட தலை, முதுகு ஒட்டிப் பிறந்தவர்களை நிறைய பார்க்க முடியும். அதற்காக, கால் இருக்க வேண்டிய இடத்தில் தலை இருக்குமா? அப்படி இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்த ஃபோட்டோஷாப் செய்த நபருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் செயல்பட்டுள்ளார்.
ஃபோட்டோஷாப் எப்படி செய்யப்படுகிறது என்பதற்கு உதாரணமாக ஒரு டெமோ வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் புகைப்படம் போலியான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை பகிர்ந்து மற்றவர்களை குழப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
