தமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்: உண்மை அறிவோம்!

அரசியல் சமூக வலைதளம்

‘’தமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link Archived Link 1 Asianet Tamil Link Archived Link 2

ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஏசியாநெட் தமிழ் இணையதள செய்தியை கிளிக் செய்து படித்து பார்த்தால், அதில் தலைப்பில் கூறியுள்ளதுபோல, செய்தியின் உள்ளே எந்த விசயமும் குறிப்பிடப்படவில்லை. ஸ்டாலின் சாதாரணமாக, ஆளுநருக்கு கடிதம் எழுதி சில கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளதாக, செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் குறிப்பிட்டுள்ளதுபோல, மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளை பார்வையிட தீர்மானித்தோம். இதன்படி, ட்விட்டர் பதிவின் விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Archived Link

இதேபோல, ஃபேஸ்புக்கில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Archived Link

இவ்விரு பதிவுகளிலுமே ஸ்டாலின் எங்கேயும் ஆளுநரை எச்சரிக்கவில்லை. மாறாக, ‘’அண்ணா பல்கலைக்கழகத்தின் சிஈஜி கேம்பசில் 2019ம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில் சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவது கண்டிக்கத்தக்கது, இதனை ஆளுநரும், உயர்கல்வித்துறையும் மாற்றிட வேண்டும்,’’ என்றுதான் கோரிக்கை விடுக்கிறார்.

அதை சரியாகப் படிக்காமல், மேற்கண்ட ஏசியாநெட் செய்தியில், ‘அண்ணன் யார் தெரியுமா? சார் யார் தெரியுமா?’ என சினிமா படங்களில் வருவது போல பில்டப் ஏற்றி, மு.க.ஸ்டாலின் சொல்லாததை சொன்னதாக, செய்திக்கு தலைப்பு வைத்து, பரபரப்பு கிளப்பியுள்ளனர். இப்படி ஊடகங்கள் உண்மையை வெளியிடாமல் பில்டப் செய்து ஒரு சார்பாக செய்தி வெளியிடுவதால்தான், அரசியல்வாதிகள் என்போர் மக்கள் நலன் பற்றி அக்கறையில்லாத நபர்களாக, விளம்பர பிரியர்களாக, ஏட்டுச் சுரைக்காயாக நடமாடுகின்றனர்.    

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியின் தலைப்பு தவறாக உள்ளதென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்: உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •