
‘‘இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் சானக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2023 ஐபிஎல் சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் சானக்க ஏலம் விடப்படவே இல்லை. ஆனால், அவர் சென்னை அணியில் சேர்க்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட Kyle Jamieson காயம் காரணமாக விலகவே, அவருக்குப் பதிலாக சானக்க சேர்க்கப்படுவார் என்று எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், சிஎஸ்கே தரப்பில் Sisanda Magala சேர்க்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக, சானக்க விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, முறையான அறிவிப்பு எதுவும் இல்லாமலேயே தவறான செய்தியை நியூஸ் 18 வெளியிட்டுள்ளதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
இதுபற்றி நமது இலங்கைப் பிரிவினர் வெளியிட்ட ஃபேக்ட்செக் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் சானக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
