FACT CHECK: டெல்லி டிராக்டர் பேரணி என்று கூறி பகிரப்படும் ஜெர்மனி படம்!

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி ஒத்திகை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2

டெல்லியில் பெருமக்கள் டிராக்டர் பேரணி ஒத்திகை என்று குறிப்பிட்டு ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. இதை தினமலர் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Nags Rajan 2021 ஜனவரி 8 அன்று பகிர்ந்துள்ளார்.

இதனுடன் டெல்லி விவசாயிகள் பேரணி படங்களைச் சேர்த்து தாரைப்பிதா என்பவர் 2021 ஜனவரி 7ம் தேதி பதிவிட்டுள்ளார். இந்த படத்தை பலரும் ஷேர் செய்து வரவே அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் டிராக்டர்கள் வரிசையாக நிற்கும் ஒரே ஒரு படம் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இந்த டிராக்டர்களைப் பார்க்க இந்தியாவில் உள்ளது போல இல்லை. எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 

அப்போது இந்த புகைப்படம் 2019ம் ஆண்டு பெர்லினில் நடந்த விவசாயிகள் பேரணியின் போது எடுக்கப்பட்டது என்று பல பதிவுகள் நமக்குக் கிடைத்தன. அதில், ஒரு செய்தியில் இந்த புகைப்படத்தை ஏபி செய்தி நிறுவனம் எடுத்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில் ஏபி இமேஜஸ் தளத்தில் சென்று பெர்லின் விவசாயிகள் போராட்டம் என்பது உள்ளிட்ட கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படம் நமக்குக் கிடைத்தது. 

அசல் பதிவைக் காண: newsandstar.co.uk I Archive 1 I apimages.comI Archive 2

இதன் மூலம் 2019ம் ஆண்டு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடந்த விவசாயிகள் போராட்ட படத்தை 2021 டெல்லியில் நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியின் காட்சி என்று தவறாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் டெல்லியில் எடுக்கப்பட்டது இல்லை, ஜெர்மன் தலைநகர் பெர்லினில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:டெல்லி டிராக்டர் பேரணி என்று கூறி பகிரப்படும் ஜெர்மனி படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •