பொருளாதார நிபுணர் அமர்தியா சென் காலமானார் என்று செய்தி ஊடகங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்தியா சென் மரணம் என்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. NewsTamil 24×7 என்ற ஊடகம் 2023 அக்டோபர் 10ம் தேதி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

உண்மை அறிவோம்:

பொருளாதார நிபுணர் அமர்தியா சென் மரணம் என்று தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சில ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுவிட்ட அழித்துவிட்டன. ஆனால் சமூக ஊடகங்களில் பலரும் அமர்தியா சென் மறைந்துவிட்டார் என்று குறிப்பிட்டு இரங்கல் பதிவை வெளியிட்டு வருகின்றனர். எனவே, இந்த தகவல் தொடர்பாக ஆய்வு செய்தோம்.

Archive

அமர்தியா சென் உடல் நிலை என்று கூகுளில் டைப் பெய்து தேடிய போது அவரது மகள் வெளியிட்டிருந்த எக்ஸ் (ட்விட்டர்) பதிவு நமக்குக் கிடைத்தது. அதில், "நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி ஆனால் இது பொய்யான செய்தி: பாபா (அப்பா) நன்றாக இருக்கிறார். கேம்பிரிட்ஜில் குடும்பத்துடன் ஒரு அற்புதமான வாரத்தை நாங்கள் ஒன்றாகக் கழித்தோம்—நேற்றிரவு நாங்கள் விடைபெறும் போது அவரது அணைப்பு எப்போதும் போல் வலுவாக இருந்தது! அவர் ஹார்வர்டில் வாரத்திற்கு 2 வகுப்புகளை எடுக்கிறார். தனது துறை புத்தகத்தில் பணிபுரிகிறார் - எப்போதும் போல் மும்முரமாக இருக்கிறார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

செய்தி ஊடகங்கள் தகவலை உறுதி செய்யாமல் வெளியிட்ட பதிவால் குழப்பம் ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது. இதன் மூலம் அமர்தியா சென் மரணம் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

அமர்தியா சென் காலமானார் என்று பரவும் தகவல் தவறானது என்று அவரது மகள் உறுதி செய்துள்ளார். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது. எஎனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அமர்தியா சென் காலமானார் என்று பரவும் வதந்தி!

Written By: Chendur Pandian

Result: False