
‘’ உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ உத்தரப் பிரதேசம்: சுங்கக்கட்டணம் கேட்டதால் சுங்கச்சாவடியை ஜே.சி.பி. கொண்டு உடைத்த முகமது சாஜித் அலி கைது..!,’’ என்று கூறப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த ஜூன் 11, 2024 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள Chhajarsi என்ற சுங்கச்சாவடியில் புல்டோசர் ஓட்டுநர் ஒருவரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். ஆனால், ஆத்திரமடைந்த அந்த நபர் புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை இடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பேரில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
The Print Link l DNA India Link l Times of India Link
இதுதொடர்பாக வெளியான செய்திகள் அனைத்திலும் இந்த குற்றத்தை செய்த நபரின் பெயர் தீரஜ் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒரு முஸ்லீம் என்றும், அவரது பெயர் முகமது சாஜித் அலி என்றும் கூறி சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்.
ஏனெனில், இதுபற்றி உத்தரப்பிரதேச மாநில போலீசார் (HAPUR POLICE) ஏற்கனவே விரிவான விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட குற்றவாளியின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை தெளிவாகக் குறிப்பிட்டு, போலீசார் பதிவிட்டுள்ளனர்.
எனவே, இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒரு இந்து என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது. ஆனால், முஸ்லீம் நபர்தான் இவ்வாறு செய்ததாக, வேண்டுமென்றே சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது என்று பரவும் வதந்தி…
Written By: Fact Crescendo TeamResult: False
