
ஒடிசாவில் உள்ள விமான நிலையத்தின் உள்ளே மழை நீர் அருவி போல் கொட்டுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2
விமான நிலையத்தின் உள்ளே இருக்கும் கடைகளில் மழை நீர் அருவி போல கொட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒடிசா மாநிலத்தில் உள்ள விமான நிலையம் மோடியின் மற்றும் ஒரு சாதனை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே வீடியோவை “மக்களே ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க! இது நம் மோடி கட்டிய புதிய குவஹாத்தி விமானநிலையம்! தன்னோட நண்பன் அதானிக்கு எழுதி கொடுத்துட்டார்! ஒரேஒரு மழை! விமான நிலையம் நிலமையை பாருங்கள்!” என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
விமான நிலையத்தின் உள்ளே மழை நீர் அருவி போல கொட்டும் வீடியோவை அஸ்ஸாம், ஒடிசா விமானநிலையம் ஒன்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்த வருகின்றனர். விமானநிலையம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரக்கூடியது என்பதால் எந்த விமானநிலையமாக இருந்தாலும் அது மத்திய அரசு மீதான குற்றச்சாட்டாகவே இருக்கும்.
நாம் எடுத்துக்கொண்டது விமான நிலையத்தில் மழை நீர் ஒழுகியதா, எங்கு, எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று அறிய ஆய்வு செய்தோம். இந்த வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2024 மார்ச் 31ம் தேதி சிலர் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது தெரிந்தது.
உண்மைப் பதிவைக் காண: instagram.com I indiatoday.in I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் LGBI ஏர்போர்ட் என்று இருப்பதைக் காண முடிந்தது. கூகுளில் எல்ஜிபிஐ விமானநிலையம் என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அது அஸ்ஸாம் தலைநகர் குவகாத்தி Lokpriya Gopinath Bordoloi International Airport என்று தெரியவந்தது. இதன் மூலம் இந்த வீடியோ ஒடிசா விமானநிலையம் இல்லை, அஸ்ஸாம் மாநிலம் குவகாத்தி விமானநிலையம் என்பது உறுதியானது. மேலும் 2024 மார்ச் 31ம் தேதி ஏற்பட்ட திடீர் கனமழை காரணமாக விமானநிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது என்றும் கூரையிலிருந்து மழைநீர் உள்ளே கொட்டியது என்றும் செய்திகள் நமக்குக் கிடைத்தன.
உண்மைப் பதிவைக் காண: pratidintime.com I Archive
விமான நிலையத்தை தனியாரிடம் வழங்கியதால்தான் மழை நீர் உள்ளே கொட்டியது என்று இல்லை. குவாகத்தி விமானநிலையம் அதானி நிறுவனத்துக்கு 2021ல் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பும் பல முறை இப்படி நிகழ்ந்துள்ளது தொடர்பான செய்திகள் நமக்கு கிடைத்தன. 2018ல் மழை நீர் விமானநிலையத்தின் உள்ளே கொட்டியபோது தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஜெயந்த் சின்ஹா உறுதியளித்த செய்திகளும் நமக்கு கிடைத்தன. ஆனாலும் தொடர்ந்து விமான நிலையத்திற்குள் மழை நீர் கொட்டிக்கொண்டுதான் இருக்கிறது என்று செய்திகள் கூறுகின்றன.
நம்முடைய ஆய்வில், ஒடிசா விமான நிலையத்தில் மழை நீர் கொட்டுகிறது என்று பரவும் தகவல் தவறானது… இந்த வீடியோ அஸ்ஸாம் மாநிலத்தின் குவகாத்தியில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தகவல் உண்மையுடன் தவறான தகவல் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஒடிசா விமான நிலையத்திற்குள் மழை நீர் கொட்டும் காட்சி என்று பரவும் வீடியோ அஸ்ஸாம் மாநிலம் குவாகத்தி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஒடிசா விமானநிலையம் உள்ளே மழை நீர் கொட்டும் அவலம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
