நரேந்திர மோடி ஆட்சியில் வளர்ச்சி என்று மிக மோசமான சாலையில் வேன் ஒன்று செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive I x.com I Archive

குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் மிக மோசமான சாலையில் வேன் ஒன்று பயணிகளுடன் வரும் வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "மோடியின் வளர்ச்சி நண்பர்களே" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மிக மோசமான சாலையில் வாகனம் செல்லும் வீடியோவை பதிவிட்டவர்கள் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. மேலும், இந்த வீடியோவில் உள்ள வாகனத்தைப் பார்க்கும் போது இந்தியாவில் உள்ளது போல இல்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் இந்த தேடுதலில் கிடைக்கவில்லை. வாகனத்தில் KUPJ TOUR என்று எழுதப்பட்டிருந்தது. இந்த பெயரை அப்படியே கூகுளில் பதிவிட்டு தேடினோம். அப்போது, இந்த பெயரில் இயங்கும் போக்குவரத்து இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுகளில் இருப்பது தெரியவந்தது. மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே போன்ற வாகனமும் நமக்குத் தேடுதலில் கிடைத்தது.

yandex.com என்ற மற்றொரு புகைப்படங்கள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் இணையதளத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள காட்சிகளை பதிவேற்றத் தேடினோம். அப்போது, இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா தீவு பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகப் பலரும் யூடியூபில் வீடியோ பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

தொடர்ந்து தேடிய போது. 2022ம் ஆண்டு இந்த வாகன வீடியோவுடன் இந்தோனேஷிய ஊடகத்தில் செய்தி ஒன்று வெளியாகி இருப்பதும் நமக்குக் கிடைத்து. அதில், வடக்கு சுமத்ராவின் வடக்கு லாபுஹன்பது, ஜம்பூர் 9 கிராமத்தில் மோசமாக சேதமடைந்த சாலையின் காரணமாக பயணி ஒருவர் வாகனத்திலிருந்து கீழே விழுந்ததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போத வைரல் ஆகியுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ இந்தியாவைச் சார்ந்தது இல்லை என்பது உறுதியாகிறது.

உண்மைப் பதிவைக் காண: metrotvnews.com I Archive

நம்முடைய ஆய்வில் நரேந்திர மோடி ஆட்சியில் இந்திய சாலைகள் என்று குறிப்பிட்டு சாலையில் உள்ள பள்ளத்தில் செல்லும் வாகனத்திலிருந்து கீழே விழுந்த பயணி என்று பரவும் வீடியோ இந்தோனேஷியாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான தகவல் கொண்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நரேந்திர மோடி ஆட்சியில் இந்திய சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது என்று பரவும் வீடியோ இந்தோனேஷியாவைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘நரேந்திர மோடி ஆட்சியில் மோசமான சாலைகள்’ என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False