
‘’பதுங்கு குழியை நோக்கி ஓடும் காகிதப்புலி நெதன்யாகு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இந்த பதிவில் ‘’பதுங்கு குழியை நோக்கி ஓடும் காகிதப்புலி நெ.த.ன்.யா.கு… இஸ்ரேல் பிரதமருக்கு கை நடுங்க ஆரம்பித்துவிட்டது…பாதுகாப்பான இடத்துக்கு தப்பி ஓட்டம்…”வாழ்க்கை ஒரு வட்டம், மெலிருக்கிறவன் கீழே வருவான், கீழே இருக்கிறவன் மேலே வருவான்.. “’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவ தொடங்கியுள்ளன. நாமும் அவை பற்றி தொடர்ச்சியாக ஃபேக்ட்செக் செய்து, வருகிறோம்.
Fact Crescendo Tamil Link 1 l Link 2
அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான், ‘பெஞ்சமின் நெதன்யாகு தப்பியோடும் காட்சி’ என்ற வீடியோவும்…
ஆம், கடந்த 2021ம் ஆண்டு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு ஒன்றில் பங்கேற்பதற்காக, குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்ற நோக்கில் நெதன்யாகு வேகமாகவும், விரைவாகவும் ஓடிச் சென்றார். இந்த வீடியோவை அவரே தனது அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Benjamin Netanyahu X Post l Archived Link
கூடுதல் செய்தி ஆதாரம் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, 2021ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போதைய இஸ்ரேல் – ஈரான் மோதலுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram