‘’மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு ரகசிய பாதையை உருவாக்கியுள்ளனர். அதன் வழியாக மியான்மர் மக்கள் இந்தியாவுக்குள் வரும் காட்சி,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மலைப்பிரதேச கிராமத்திலிருந்து மிகவும் ஆபத்தான பாறை பாதை வழியாக சிலர் முதுகில் குழந்தையை வைத்துக் கொண்டு செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு ரகசிய பாதையை உருவாக்கியுள்ளனர், எப்படி இவர்கள் உயிரை பணயம் வைத்து இந்தியாவுக்கு வருகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Prabhakar Shenoy என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 11ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு அதுவும் மணிப்பூருக்கு ரகசிய பாதையை உருவாக்கி அகதிகளாக மக்கள் வருகின்றனர் என்று பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ளவர்களைப் பார்க்கும் போது, அவர்கள் மியான்மர் மக்கள் போல இல்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பதிவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது யூடியூபில் வெளியான சில வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. அதில், ஈரானின் நாடோடி மக்கள் கடினமான பாதைகளைக் கடந்து செல்லும் காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ ஏப்ரல் 25, 2023 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதன் மூலம், மியான்மரில் இருந்து அகதிகளாக மக்கள் மணிப்பூருக்கு (இந்தியாவுக்கு) வருவதாகப் பரவும் வீடியோ உண்மையானது இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தகவல் தவறானது ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மியான்மரில் இருந்து மணிப்பூர் வரும் ரகசிய பாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False