
நடிகை சபீதா ஆனந்த் உடன் நடிகர் தலைவாசல் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தலைவாசல் விஜய்யின் குடும்பம் என்று சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பகிர்ந்து வருகின்றனர்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நடிகர்கள் தலைவாசல் விஜய், சபீதா ஆனந்த் ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நடிகர் தலைவாசல் விஜய் அவரின் அழகிய குடும்பம் பிடித்தால் ஒரு வாழ்த்து சொல்லலாமே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகர் தலைவாசல் விஜய், நடிகை சபீதா ஆனந்த் மற்றும் வேறு ஒரு பெண்மணி ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வைத்து அது தலைவாசல் விஜய் குடும்பம் என்று பதிவிட்டுள்ளனர். ஆனால் விஜய் தன்னுடைய குடும்பத்துடன் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும் நடிகை சபீதாவுடன் சீரியல்களில் நடித்து வருகிறார். எனவே, இந்த தகவல் தவறானது என்பது தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: Instagram
அந்த படத்தைப் பற்றி ஆய்வு செய்தோம். படத்தை கூகுள் லென்சில் பதிவேற்றித் தேடிய போது அதை சபீதா ஆனந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஆனால் அந்த புகைப்படம் பற்றி எந்த ஒரு தகவலையும் அவர் வெளியிடவில்லை.
உண்மைப் பதிவைக் காண: asianetnews I Archive
தலைவாசல் விஜய் குடும்பத்துடன் அளித்த பேட்டி வீடியோக்களை தேடி எடுத்தோம். 2024 ஏப்ரலில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரது குடும்பத்தினரும் உடன் இருந்தனர். அவர் தன் மனைவி, மகன், மருமகள் ஆகியோவை அவர் அறிமுகம் செய்தார்.
அப்போது தனக்கு ஒரு மகள் இருப்பதாகவும், அவர் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றதால் இந்த பேட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறுகிறார். இதுவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் தலைவாசல் விஜய்யின் குடும்பம் இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
நடிகர் தலைவாசல் விஜய் குடும்பம் என்று பரவும் புகைப்படம் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:நடிகர் தலைவாசல் விஜய் குடும்பம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
