ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ் ஆகியோரின் குடோனில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டதா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu தவறாக வழிநடத்துபவை I Misleading

‘‘ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ் ஆகியோரின் குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ *தமிழக துணை முதல்வர் உதயநிதி அவர்களின் கூட்டாளிகள் ரித்தீஷ் ஆகாஷ் அவர்களின் குடோனில *கைப்பற்றிய**பணம்**மூன்று நாட்களாக என்னப்* *படுகிறது இந்த**இது தான் ஊழலற்ற* *ஆட்சியின் லட்சனம்* *,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன், வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, கடந்த 2022ம் ஆண்டு கொல்கத்தாவில் தொழிலதிபர் ஒருவரிடம் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ரூ.18 கோடி மீட்கப்பட்டதாகக் கூறி, இதே வீடியோ ஊடகங்களில் ஏற்கனவே பகிரப்பட்டுள்ளதைக் கண்டோம். 

India Today l NDTV 

எனவே, இதற்கும், ஆகாஷ் பாஸ்கரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அடுத்தப்படியாக, ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரத்தீஷ் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனை பற்றி ஏற்கனவே ஊடகங்களில் வெளியான செய்தி வேறொன்றாக உள்ளது. 

அதனையும் ஆதாரத்திற்காக இங்கே இணைத்துள்ளோம். 

One India Tamil l News18 Tamil Nadu

எனவே, பழைய வீடியோவை எடுத்து, புதியது போன்று குறிப்பிட்டு, தற்போதைய அரசியலுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ் ஆகியோரின் குடோனில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading