டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவின் பழைய வீடியோ இதுவா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’டெல்லி பெண் முதலமைச்சரின் பழைய காணொளி’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ *டெல்லி பெண் முதலமைச்சரின் பழைய காணொளி*
*டெல்லியின் பொறுப்பு இப்பொழுதுதான் ஒரு சரியான நபரிடம் சென்று சேர்ந்துள்ளது.*
*இப்போது இவர்தான் டெல்லியின் முதலமைச்சர்*
*இனி எல்லாமே சரியாக இருக்கும்*
*பெண் குலத்தின் பெருமை போற்றும் பெண்மணி*’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன், இளம்பெண் ஒருவர் தற்காப்புக் கலை பயிற்சி செய்வது போன்ற காட்சிகள் உள்ள வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2   

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோவுக்கும், தற்போது டெல்லியின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது. 

ஆம், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் தற்காப்புக் கலை பயிற்சி செய்பவர் Payal Jadhav என்ற மராத்தி நடிகை ஆவார். 

முழு வீடியோ லிங்க் இதோ…

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் பாயல் ஜாதவ் ஆகியோரின் புகைப்படங்களை ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

இதுதொடர்பாக, நமது Fact Crescendo Malayalam ஏற்கனவே விரிவான ஃபேக்ட்செக் வெளியிட்டுள்ளது. 

இவற்றின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவின் பழைய வீடியோ இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False