சீனாவில் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’சீனாவில் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ சீனாவில் விமான நிலைய கூரை இடிந்து விழுந்தது.

வளர்ந்த சீனா என்று அழைக்கப்படுபவற்றின் உண்மை இதுதான். 🤡

சீன தயாரிப்புகள் முதல் சீன விமான நிலையங்கள் வரை, சீனாவில் எதுவும் நீடித்து உழைக்காது.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது சீனாவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் ஏற்பட்ட பாதிப்பு என்றும், விமான நிலையம் கிடையாது என்றும் தெரியவந்தது. 

இதன்படி, ஜூலை 8, 2025 அன்று சீனாவில் உள்ள Chongqing என்ற இடத்தில் செயல்படும் Xicheng Tiandi என்ற ஷாப்பிங் மால் கட்டிடத்தின் ஒரு தளத்தில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததோடு, கழிவுநீர் அதன் வழியாக நிரம்பி ஓடியுள்ளது. இதனால், பீதியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து தப்பியோடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. குறிப்பிட்ட ஷாப்பிங் மால் தனியாருக்குச் சொந்தமான ஒன்று. Wang Jianlin என்பவருக்குச் சொந்தமான Wanda Group இந்த Xicheng Tiandi கட்டிடத்தை நிர்வகிக்கிறது. 

MSN Link l NewsFlare Link 

எனவே, ஷாப்பிங் மால் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவை எடுத்து, சீன அரசுக்குச் சொந்தமான விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததாகக் கூறி, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:சீனாவில் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததா?

Fact Check By: Pankaj Iyer 

Result: MISSING CONTEXT

Leave a Reply