“இந்தியா இந்தி பேசும் மக்கள் வாழும் நாடு” என்று சீமான் கூறினாரா?

தவறாக வழிநடத்துபவை I Misleading

இந்தியா என்பது இந்தி பேசும் மக்கள் வாழும் நாடுதான் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

சீமானின் பேட்டியின் சில விநாடிகளை மட்டும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், “அவரவர்க்கு அவரவர் தாய்மொழி இருக்கிறது. பயன்பாட்டு மொழியா ஆங்கிலம் உள்ளது. தேவை என்றால் இந்தி கற்கலாம். இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் கற்கலாம். இந்த நாட்டைப் பொறுத்தவரைக்கும் இந்தியா என்பது இந்தி பேசும் மக்கள் வாழக்கூடிய நிலம் என்பதுதான். இந்தியர் என்பதே இந்தி பேசக் கூடியவர்கள்தான். நாமெல்லாம் அவர்களுக்கு பொருட்டே கிடையாது” என்கிறார். அந்த வீடியோவின் மீது, “இந்தியா என்பது இந்தி பேசும் மக்கள் வாழக் கூடிய நிலப்பரப்புதான்! – சீமான் சர்ச்சை கருத்து” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த வீடியோ பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ மற்றும் ஸ்கிரீன்ஷாட் பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியா என்பது இந்தி பேசும் மக்கள் வாழும் நாடுதான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், வீடியோவை பார்க்கும் போது, அது சீமான் கருத்து என்று இல்லை. இந்த நாட்டைப் பொறுத்த வரைக்கும் இப்படி ஒரு கருத்து நிலவுகிறது என்றுதான் சீமான் கூறுகிறார். வீடியோ முழுமையாக இல்லாததால் அதை தேடி எடுத்தோம்.

பாலிமர் டிவி யூடியூப் பக்கத்தில் இருந்து இந்த வீடியோவை எடுத்தோம். 2.02.55வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் இரண்டாவது பகுதி வருகிறது. நிருபரின் கேள்விக்கு சீமான் பதில் அளிக்கிறார். அப்போது, “நீங்கள் வெளிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்டைப் பொறுத்த வரைக்கும் இந்தியா என்பது இந்தி பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பு தான். இந்தியர் என்பதே இந்தி பேசக்கூடியவர்கள்தான். நாமெல்லாம் அவர்களுக்கு பொருட்டே கிடையாது. 

குறிப்பாக நம்மை, என்னை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று நான் நினைப்பேன்னா, என்னுடைய நிலத்தின் வளத்துக்காகவும் என்னுடைய வரிக்காகவும்தான். நான் அவர்களுக்கு ஒரு உயிரோ, எனக்கு ஒரு உணர்வு இருக்கென்றோ, எனக்கு உரிமை இருக்கோ என்று எல்லாம் அவர்களுக்கு கிடையாது. 

நான் ஒரு ஓட்டு, என் வரி வேண்டும், என் நிலத்தின் வளம் வேண்டும். வேற நமக்கு எந்த அளவுக்கு மரியாதை இருக்குன்னு நினைக்குறீங்க” என்கிறார்.

இதன் மூலம் இது சீமானின் கருத்து இல்லை என்பதையும் இந்திய ஆட்சியாளர்களுக்கு அப்படி ஒரு எண்ணம்தான் உள்ளது என்றும் சீமான் கூறியிருப்பது தெளிவாகிறது. இந்திய ஆட்சியாளர்களின் எண்ணம் அப்படியாக உள்ளது என்று சீமான் கூறியதை மாற்றி, சீமானின் கருத்து என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. 

நம்முடைய ஆய்வில் சீமானின் பேட்டியைத் தவறான அர்த்தத்தில் பகிர்ந்திருப்பதைத் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மத்திய ஆட்சியாளர்களுக்கு இந்தியா என்றால் இந்தி பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பு என்ற எண்ணம் உள்ளது என்ற அர்த்தத்தில் சீமான் கூறியதை, சீமானின் கருத்து என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“இந்தியா இந்தி பேசும் மக்கள் வாழும் நாடு” என்று சீமான் கூறினாரா?

Written By: Pankaj Iyer  

Result: Misleading