
ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது சக கட்சித் தலைவரை செருப்பால் அடித்த காட்சி, என்று கூறி சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். அதுபற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
இந்த வீடியோவை முதலில் நன்கு உற்றுப் பார்த்தாலே, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அந்த வீடியோவில் கூட்ட அரங்கில் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவம் அடங்கிய பதாகை ஒன்று இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. எனவே, இதற்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது ஆரம்பத்திலேயே தெளிவாக தெரியவருகிறது.

அதை விட நகைச்சுவை என்னவெனில், வீடியோவை பார்த்த பலரும் இதில் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தின் பதாகை உள்ளதைக் கூட கவனிக்காமல், ஆம் ஆத்மி கட்சியினை விமர்சித்து, கமெண்ட் பகிர்ந்துள்ளனர். இத்தனைக்கும் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ள ஃபேஸ்புக் பக்கம், பாஜக ஆதரவு குழுவாகும்.

இதன்பேரில் தொடர்ந்து விவரம் தேடியபோது, இது கடந்த 2019ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம், Sant Kabir Nagar பகுதியில் நடைபெற்ற பாஜக., நிர்வாகிகள் கூட்டத்தின்போது, வாக்குவாதம் முற்றி, பாஜக எம்.பி., சரத் திரிபாதி என்பவரை ராகேஷ் பாகல் என்ற சக எம்.எல்.ஏ., செருப்பால் அடித்தார்.

இதுதொடர்பான வீடியோ காட்சியை எடுத்தே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புபடுத்தி, ‘முரட்டுத்தனமாக, சற்றும் சந்திக்காமல்’ வதந்தி பரப்பி வருகிறார்கள் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது கட்சித் தலைவரை செருப்பால் அடித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
