‘’நடிகர் சிவக்குமார் தனக்கு பொன்னாடை போர்த்த வந்த ரசிகர் ஒருவரை வேண்டுமென்றே அவமதித்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link

இந்த வீடியோ பதிவில், ‘’ காரைக்குடியில் நடைபெற்ற பழ.கருப்பையாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சிவக்குமாருக்கு, தள்ளாடும் வயதில் இருந்த ரசிகர் ஒருவர் பொன்னாடை போர்த்த முயன்றார். ஆனால், அவரை நடிகர் சிவக்குமார் உதாசீனப்படுத்திவிட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. ஆனால், இதுபற்றி நடிகர் சிவக்குமார் எந்த பதிலும் அளிக்கவில்லை,’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதேபோன்று மேலும் சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்ததைக் கண்டோம்.

Oneindia Tamil Link l Polimer News Link

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், நடிகர் சிவக்குமார் மற்றும் குறிப்பிட்ட ரசிகரும் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

இதன்படி, கரீம் என்ற அந்த நபரும், சிவக்குமாரும் கடந்த 50 ஆண்டு காலமாக நெருங்கிய நண்பர்கள். சிவக்குமாரே முன்னின்று கரீமுக்கு திருமணம் செய்து வைத்தது முதலாக, இருவருக்கும் இடையே பல்வேறு நெகிழ்ச்சியான அனுபவங்கள் நிகழ்ந்துள்ளதாக, இந்த வீடியோ விளக்கத்தின் மூலமாக தெரியவருகிறது.

மேலும், ‘’இத்தகைய நெருங்கிய நண்பர் வேண்டுமென்றே எனக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் சால்வை அணிவிக்க வந்தார். ஏற்கனவே களைப்பாக இருந்த நான், நமக்குள் எதற்கு இதெல்லாம் என்று கூறி அதனை வாங்கி கீழே வீசினேன். பொதுவெளியில் இவ்வாறு சால்வை போட வந்தது அவருடைய தவறு. அதனை ஏற்காமல், கீழே வீசியது என்னுடைய தவறு. I Feel Sorry,’’ என்று சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

சிவக்குமார் உரிய விளக்கம் கொடுத்து, 24 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில், பல்வேறு ஊடகங்களும் தாங்கள் வெளியிட்ட பழைய செய்தியை அப்டேட் செய்யாமல் அப்படியே வைத்துள்ளன. அவற்றை பார்க்கும் சாமானிய மக்கள் உண்மை எது என்று தெரியாமல் குழப்பமடையும் சூழல் உள்ளது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் நம்பகமானது இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:நடிகர் சிவக்குமார் சால்வை அணிவிக்க வந்த ரசிகரை வேண்டுமென்றே அவமதித்தாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISLEADING