‘’எய்டன் மார்க்ரமை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த காவ்யா மாறன்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ கலாநிதிமாறன் மகள் காவ்யாமாறன்.இருநூறு உபீஸ் இதையும் பார்த்து ஆனந்த கூத்தாடும்....’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் தொடர்பாக, நாம் விவரம் தேடினோம். ஏராளமான ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் மட்டுமின்றி யூ டியுப் பக்கங்களிலும் காவ்யா மாறன், பலர் முன்பு மைதானத்தின் நடுவே எய்டன் மார்க்ரமை இவ்வாறு கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக, தகவல் பகிர்ந்திருந்ததைக் கண்டோம்.

ஆனால், இவர்கள் கூறுவதுபோல இந்த வீடியோவில் மார்க்ரமை கட்டிப்பிடித்து முத்தமிட்டது காவ்யா மாறன் இல்லை; மார்க்ரமின் காதல் மனைவி Nicole Danielle Markram.

குறிப்பிட்ட வீடியோவில் உள்ள பெண் அணிந்துள்ள சன் ரைசர்ஸ் ஜெர்சியில் உள்ள எண் (orange army 94), கையில் உள்ள வாட்ச் மற்றும் மார்க்ரம் தலையில் உள்ள கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை கவனித்தால் அவரது மனைவிதான் இவ்வாறு முத்தம் கொடுத்தவர், என்பது தெளிவாகிறது.

மேலும், இந்த முத்த வீடியோ பதிவு செய்யப்பட்ட அதே நாளில் எடுத்த மற்றொரு புகைப்படத்தை மார்க்ரம் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை கீழே இணைத்துள்ளோம்.

இந்த புகைப்படத்தை 2023, பிப்ரவரி 14 அன்று நிகோல் வெளியிட்டுள்ளார். ஏனெனில், அதற்கு முன்பாக, பிப்ரவரி 12, 2023 அன்று தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற SA T20 (XXSA20) தொடரில், மார்க்ரம் தலைமையிலான Sunrisers Eastern Cape அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதேபோன்று, எய்டன் மார்க்ரமும் அதே நாளில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இதற்குப் பிறகு சில மாதங்கள் கழித்தே, இருவரும் திருமணம் செய்துகொண்டதாக, அறிவித்தனர்.

Sportskeeda Link

எனவே, 2023ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து, தற்போது சிலர் வேண்டுமென்றே, ‘காவ்யா மாறன் மார்க்ரமை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்’ என்று கூறி வதந்தி பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.


எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:காவ்யா மாறன் எய்டன் மார்க்ரமை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False