‘’ இந்து என்பதால் வங்கதேசத்தில் கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டிற்கு, இஸ்லாமிய கலவரக்காரர்கள் தீ வைத்த அவலம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் இந்து என்பதால் வீட்டில் தீ யை வைத்த இஸ்லாமியர்கள்..😢

திருந்துங்கடா நாளைக்கு நமக்கும் இந்நிலமை தானா.

Ramesh kalam’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

அண்டை நாடான வங்கதேசத்தில் தற்போது அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்துள்ளது. இதையொட்டி, சமூக வலைதளங்களில் ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றில் பலவும் வதந்திகளாகவே உள்ளன.

அந்த வரிசையில் பகிரப்படும் ஒரு தவறான செய்திதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ‘’கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டிற்கு, இஸ்லாமிய கலவரக்காரர்கள் தீ வைத்த அவலம்,’’ என்ற தகவலும்…

ஆம், இந்த சம்பவம் இந்துவா, முஸ்லீமா என்ற கோணத்தில் நடைபெற்ற சம்பவம் கிடையாது. வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் Mashrafe bin Mortaza தற்போது Awami League கட்சி எம்.பி.,யாக உள்ளார். அவரது கட்சியின் தலைவரும், பிரதமருமான ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறி விட்டதால், அவரது கட்சிக்குச் சொந்தமான சொத்துகள், கட்சி நிர்வாகிகள் வீடுகளையும் கலவரக்காரர்கள் சூறையாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகவே, Mashrafe bin Mortaza வீட்டிற்கும், கலவரக்காரர்கள் தீ வைத்துள்ளனர். மேலும், அவர் ஒரு முஸ்லீம்தான்; இந்து கிடையாது.

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Dhaka Post l Times of India

இதுதொடர்பாக, நமது ஆங்கில மொழிப் பிரிவினர் வெளியிட்ட ஃபேக்ட்செக் லிங்க் கீழே இணைக்கப்பட்டுளளது.

Fact Crescendo English Link

இந்த உண்மை தெரியாமல், ‘லிட்டன் தாஸ் வீட்டை இஸ்லாமிய கலவரக்காரர்கள்’ தீ வைத்து கொளுத்தியதாக, சமூக வலைதளங்களில் சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:இந்து என்பதால் வங்கதேச கலவரக்காரர்கள் கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டிற்கு தீ வைத்தனரா?

Written By: Fact Crescendo Team

Result: Misleading