தமிழ்நாடு மழை வெள்ள சேதம்; உலகத் தமிழர்களிடம் நிதி கேட்டாரா மு.க.ஸ்டாலின்?   

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’தமிழ்நாடு மழை வெள்ள சேதத்திற்காக, உலகத் தமிழர்களிடம் நிதி கேட்ட மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

பாலிமர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில், ‘’ உலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்! – முதலமைச்சர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். 

இந்நிலையில் தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக அதிக கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. 

இவ்வாறு அடுத்தடுத்து மழை, வெள்ளம் ஏற்பட்டு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கேற்ப நிவாரண உதவிகள் வழங்கும்படி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, கோரிக்கை விடுத்துள்ளார். 

Hindu Tamil Link 

அதேசமயம், வெள்ள நிவாரண நிதி கேட்டு உலகத் தமிழ் மக்களுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறி மேற்கண்ட வகையில் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. 

ஆனால், இவ்வாறு எந்த கோரிக்கையும் மு.க.ஸ்டாலின் வெளியிடவில்லை. இந்த செய்தி 2021ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் வெளியிடப்பட்டதாகும்.

இதுதொடர்பாக, பாலிமர் நியூஸ் தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

கூடுதலாக, மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு வெளியிட்ட வீடியோ ஒன்றும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.  

எனவே, 2021ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் வெளியிட்ட செய்தியை எடுத்து, தற்போதைய மழை, வெள்ள பாதிப்புடன் சேர்த்து சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:தமிழ்நாடு மழை வெள்ள சேதம்; உலகத் தமிழர்களிடம் நிதி கேட்டாரா மு.க.ஸ்டாலின்?

Written By: Fact Crescendo Team 

Result: Misleading