
‘’இந்த இடம் இந்தியாவில் உள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ‘’ஸ்மார்ட் சிட்டியும் வேண்டாம், டிஜிட்டல் இந்தியாவும் வேண்டாம், இந்த இயற்கை அழகு வேண்டுமென நினைப்பவர்கள் ஷேர் பன்னுங்க,’’ என்று எழுதியுள்ளனர். இதனை உண்மை என நம்பி, ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடும் புகைப்படம் உண்மையானதா அல்லது ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதா, அதை விட முக்கியமாக இந்தியாவில்தான் உள்ளதா என்ற சந்தேகத்தில் நாம் தகவல் தேட தொடங்கினோம். இதனை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இது ஆஸ்திரேலியாவில் உள்ள Seppeltsfield எனும் இடம் என்ற தகவல் கிடைத்தது.
எனவே, இந்தியாவிற்கு தொடர்பில்லாத ஒரு புகைப்படத்தை வைத்து, லைக், ஷேர் வாங்குவதற்காக இத்தகைய தவறான தகவலை சிலர் பரப்பி வருவதாக, தெரியவருகிறது.
SEPPELTSFIELD ROAD எனும் தலைப்பில் நீங்கள், இதனை கூகுள் செய்து பார்க்கலாம்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட புகைப்படம் உண்மையானதுதான்; ஆனால், இந்தியாவில் எடுக்கப்பட்டது கிடையாது என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
