FactCheck: தமிழ்நாட்டில் 74 சுங்கச்சாவடிகள் உள்ளதாக மீண்டும் பகிரப்படும் வதந்தி…

அரசியல் இந்தியா தமிழ்நாடு

‘’கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மட்டும் வித்தியாசமாக நாட்டிலேயே அதிக சுங்கச்சாவடிகள் உள்ளன,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

‘’5,381 கிமீ தொலைவு நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழகத்தில் 74 டோல்கேட்கள் உள்ளன. கேரளாவுடன் ஒப்பிடுகையில் 9 டோல்கேட்களும், மகாராஷ்டிராவுடன் ஒப்பிடுகையில் 15 டோல்கேட்களும் இருக்க வேண்டும்,’’ என எழுதப்பட்டுள்ளது.

இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Claim LinkArchived Link 

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவலில் கூறியுள்ளதுபோல, தமிழ்நாட்டில் 74 சுங்கச்சாவடிகள்  உள்ளதா என்றால், இல்லை என்பதே பதில். ஆம், தமிழ்நாட்டில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள் மட்டுமே உள்ளன. அதில், 32 சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு தற்போது முன்னெடுத்துள்ளது.

Dinakaran Link I Samayam Tamil Link I OneIndia Tamil Link

நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில்தான் 70க்கும் அதிகமான சுங்கச் சாவடிகள் உள்ளன. அதற்கடுத்தப்படியாக, உத்தரப்பிரதேச மாநிலமும், அதையடுத்தே தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களும் உள்ளன.

இதுதவிர, நெடுஞ்சாலைகள் நீளத்தின் அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டில் 5,381 கிமீ நீளத்திற்கு நெடுஞ்சாலைகள் உள்ளது உண்மைதான்.

Fact Crescendo Tamil Link

தமிழ்நாட்டில் அளவுக்கு அதிகமான சுங்கச்சாவடிகள் உள்ளன என்பது உண்மைதான் என்றாலும், நாட்டிலேயே முதலிடம் தமிழ்நாடுதான் அதுவும் 74 சுங்கச் சாவடிகள் உள்ளன என்பது தவறான தகவலாகும்.

இதற்கடுத்தப்படியாக, சுங்கச் சாவடிகள் எண்ணிக்கையை 16ஆக குறைக்கும் கோரிக்கையை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் உள்ள கோரிக்கை நியாயமானது என்றாலும், புள்ளிவிவரம் தவறானதாக உள்ளதென்று முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:தமிழ்நாட்டில் 74 சுங்கச்சாவடிகள் உள்ளதாக மீண்டும் பகிரப்படும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply